விஜய் கைது செய்யப்படுவாரா? முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்!

TVK leader Vijay Rally Stampede : கரூர் மாவட்டத்தில் தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

விஜய் கைது செய்யப்படுவாரா?  முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்!

முதல்வர் ஸ்டாலின்

Updated On: 

28 Sep 2025 07:35 AM

 IST

கரூர், செப்டம்பர் 28 : கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, கரூர் சென்ற முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனையடுத்து, செய்தியாள்ரகளை சந்திப்பில் விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2025 செப்டம்பர் 27ஆம் தேதியான நேற்று கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. தொண்டர்கள், ரசிகர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கரூர் 100 அடி சாலையில் திரண்டனர்.

அதிகமாக கூட்டத்தால் விஜயின் பரப்புரை வாகனத்திற்கு அருகிலேயயே பெரும் நெரிசல் ஏற்பட்டது. விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலரும் மயக்க மடைந்தனர். விஜய் உரையை முடித்து வெளியேறியது நிலைமை மோசமானது. கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 12 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. சமீபத்தில் நடந்த மிகப்பெரிய துயர சம்பவமாகும். இந்த நிலையில், சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கரூர் சென்றுள்ளார்.

Also Read : மனநோயாளியாக மாறிய சீமான்.. அண்ணா குறித்து அவதூறு பேச்சுக்கு சீமான் மீது குவியும் கண்டனங்கள்..

கரூரில் முதல்வர் ஸ்டாலின்


இரவோடு இரவாக சென்ற முதல்வர் ஸ்டாலின், அதிகாலையில் கரூர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் ஸ்டாலின், “மிகுந்த துயரத்தோடு, கனத்த இதயத்தோடு நான் நின்றுக் கொண்டிருக்கிறேன். கரூரில் நடந்த சம்பவத்தை விவரிக்க முடியாது.

அதை பற்றி விவரமாக சொல்லக் கூடிய மனசு எனக்கு  இடம் கொடுக்கவில்லை. நான் வேதனையில் இருக்கிறேன்.  இந்த சம்பவம் தொடர்பாக நேற்று இரவு செய்தி கிடைத்த உடனேயே  செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டேன். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டேன். இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

Also Read : சாதாரண வார்த்தை கூட பேச தடுமாறிய விஜய்.. சொன்ன விளக்கம் என்ன?

கைது செய்யப்படுவாரா விஜய்?

அதோடு, டிஜிபி, ஏடிஜிபி ஆகியோருக்கு போன் போட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். இந்த சம்பவத்தில் மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். இதில் ஆண்கள் 13 பேர், பெண்கள் 17 பேர், ஆண் குழந்தைகள் 4 பேர், பெண் குழந்தைகள் 5 பேர் என உயிரிழந்துள்ளனர். ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்தது இதுவரை நடக்காதது.

இனியும் நடக்க கூடாது. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. நான் அரசியல் நோக்கத்துடன் எதையும் செல்லவில்லை” என்றார். தொர்ந்து, விஜய் கைது செய்யப்படுவாரா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.