இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தாயுமானவர் திட்டம் தொடக்கம்!
Thayumanavar Scheme : முதல்வர் ஸ்டாலின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் 21 லட்சத்து 76 ஆயிரத்து 454 பயனடைவார்கள். மேலும், மாதத்தில் இரண்டாவது சனி, ஞாயிறு கிழமைகளில் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.

தாயுமானவர் திட்டம்
சென்னை, ஆகஸ்ட் 12 : சென்னையில் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் தண்டையார்பேட்டையில் உள்ள மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டிற்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த திட்டம் மூலம், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் 21 லட்சத்து 76 ஆயிரத்து 454 பயனடைவார்கள். அதாவது, 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவர். தமிழகத்தில் 2.5 கோடி குடும்பத்தினர் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த பொருட்களை மாதந்தோறும நியாய விலை கடைகளுக்கு சென்று மக்கள் வாங்கி வருகின்றனர். இதற்காக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். ஆனால், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வரிசையில் காத்திருந்து ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத சூழல் உள்ளது.
இதனால், மற்றவர்களை அனுப்பி ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு, தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது. அதாவது, 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கு வகையில், இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
Also Read : ‘வேலை நிறுத்தத்தை கைவிடுக.. பணி பாதுகாப்பு 100% உறுதி’ – சென்னை மாநகராட்சி
தாயுமானவர் திட்டம் தொடக்கம்
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
“முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்”#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | #முதலமைச்சரின்_தாயுமானவர்_திட்டம் |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/hDBTCZeGyv
— TN DIPR (@TNDIPRNEWS) August 12, 2025
அதாவது, முதியவர்கள், மாற்றத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு அவருடைய வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்யும் வகையில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் 20 லட்சத்துக்கு 42 ஆயிரத்து 657 பயனாளர்களுக்கு வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப் பட உள்ளது. மேலும், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. எனவே மொத்தமாக 21.27 லட்சம் பயானர்களுக்கு வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் இனி வரும் நாட்களில் வழங்கப்பட உள்ளது. இவை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழங்கப்பட உள்ளது.
முன்னதாக, இந்த திட்டம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “கூட்டுறவுத்துறை சார்பில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Also Read : தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து வழக்கு.. உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
இப்படி அரசின் சேவைகளை மக்களின் வீடுகளுக்கு தேடிச் சென்று கொடுப்பது இந்தியாவின் முன்மாதிரி முயற்சி. இந்த நேரத்தில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்பது இந்த திட்டத்தின் நோக்கம் 100 சதவீதம் நிறைவேறும் வகையில் உங்களின் பணி அமைய வேண்டும். உங்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்களை மனம் குளிரும் வகையில் நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் பெரும் நல்ல பெயர் தான் ஆட்சிக்கு கிடைக்கும் பாராட்டு” என கூறினார்.