திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்கும் செயலி…முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்!
DMK Election Manifesto Feedback App: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்தற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் செல்போன் செயலியை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 3) தொடங்கி வைத்தார். வாட்ஸ் ஆப் எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த தேர்தலில் வெற்றியை நோக்கி அரசியல் கட்சிகள் அடியெடுத்து வைத்து வருகின்றன. இதற்காக பல்வேறு கட்ட அரசியல் பணிகளை தமிழக கட்சிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்துக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்காக கனிமொழி எம். பி. தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டு திமுக தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கான செயலியை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று சனிக்கிழமை ( டிசம்பர் 3) அறிமுகம் செய்து வைத்தார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களின் பரிந்துரைகளையும், கருத்துகளையும் பெரும் வகையில் செல்போன் எண், சமூக வலைதள தொடர்புகள், வலைதள விவரம், செயற்கை நுண்ணறிவு வாசல் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன.
செல்போன் எண்-வாட்ஸ் ஆப் எண் அறிமுகம்
மேலும், பொதுமக்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை அனுப்புவதற்கு 08069446900 என்ற தொலைபேசி எண் மற்றும் 9384001724 என்ற whatsapp எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே போல, Dmkmanifesto2026@dmk.in என்ற மின்னஞ்சல் முகவரி, dmkmanifesto26 என்ற சமூக வலைதளம், tnmanifesto.ai- என்ற செயற்கை நுண்ணறிவு தளம் ஆகியவற்றிலும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மீண்டும் மீண்டும் விஜய்யை கூட்டணிக்கு அழைக்கும் பாஜக.. இதுதான் வியூகம்?




12 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு
திமுக தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக கனிமொழி எம். பி. தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், அமைச்சர்கள் டி. ஆர். பி. ராஜா, பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், கோவி. செழியன், எம். எல். ஏ. க்கள் எழிலன், தமிழரசி, முன்னாள் எம். பி. டி. கே. எஸ். இளங்கோவன், கார்த்திகேய சிவ சேனாபதி, அப்துல்லா, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், முன்னால் ஐ. ஏ. எஸ் அதிகாரி சந்தானம், தொழில் அதிபர் சுரேஷ் சம்பந்தம் ஆகிய 12 பேர் உள்ளனர்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதி
இந்த குழுவானது, பொதுமக்கள், இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோரை நேரடியாக சந்தித்து அவர்களை நீண்ட நாள் கோரிக்கைகள் ஆகியவற்றை கேட்டு அதனை திமுக தேர்தல் அறிக்கையாக தயார் செய்ய உள்ளது. கடந்த 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், 40 அறிவிப்புகள் அரசின் பரிசை நினைவில் இருப்பதாகவும், மொத்தம் 404 வாக்குறுதிகள் (80 சதவீதம்) நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பல ஆண்டு கால போராட்டத்துக்கு முடிவு…மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…முதல்வரின் பொங்கல் பரிசு!