Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தென்காசியில் ரூ.1,020 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் – துவங்கி வைக்கும் முதல்வர்

MK Stalin’s Tenkasi Visit: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருநாள் சுற்றுப்பயணமாக தென்காசி செல்லும் நிலையில், அங்கு தமிழக அரசு சார்பில் ரூ.1,020 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார். இதனையடுத்து முதல்வரை வரவேற்க திமுகவினர் தென்காசி நகரம் முழுவதும் பேனர்கள், அலங்கார வாயில்கள் அமைத்து வருகின்றனர்.

தென்காசியில் ரூ.1,020 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் – துவங்கி வைக்கும் முதல்வர்
மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Oct 2025 08:11 AM IST

தென்காசி அக்டோபர் 29 : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அக்டோபர் 29, 2025 அன்று தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவிருக்கிறார். முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பல்வேறு நலத்திடங்களை துவங்கி வைத்தார்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்டபோர் 29, 2025 காலை திருநெல்வேலியில் இருந்து கிளம்பி தென்காசி மாவட்டத்துக்குச் செல்கிறார். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பொதுமக்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், முதல்வர் தென்காசி (Tenkasi) மாவட்டம் லாத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் 1 லட்சமாவது பயனர்  சுமதிக்கு வீடு வழங்கப்படவுள்ளது.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் முதல்வர்

அதன்பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி ஆயக்குடி சாலையில் உள்ள ஆனந்தபுரம் மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்கவுள்ளார். அங்கு, மொத்தம் ரூ.445 கோடி மதிப்பிலான நல உதவிகள் வழங்குவார்.  மேலும், தென்காசியில் ரூ.575 கோடி மதிப்பிலான முடிக்கப்பட்ட பணிகளை தொடங்கி வைக்கும் முதல்வர், மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் தென்காசி மாவட்டத்தில் மொத்தம் ரூ.1,020 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் இன்று தொடங்கப்படவுள்ளன.

இதையும் படிக்க : நெல்மணிகள் வீணாகி முளைத்தது போல… திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய் வெளியிட்ட அறிக்கை

கோவில்பட்டியில் கருணாநிதியின் சிலையை திறந்துவைத்த முதல்வர்

 

முதல்வர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்காக  பெரிய அளவிலான மேடை மற்றும் அலங்கார வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு திட்டங்கள் குறித்த பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் மைதானத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஆயக்குடிஅமர் சேவா சங்கத்திற்கு செல்லும் முதல்வர், அங்கு உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் உரையாட உள்ளார். பிற்பகல் அவர் குற்றாலம் சுற்றுலா இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்து மதுரைக்கு புறப்படுவார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

முதலமைச்சர் வருகையையொட்டி தென்காசி நகரம் முழுவதும் திமுக கட்சி கொடிகள், வரவேற்பு பேனர்கள் மற்றும் அலங்கார வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.  நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தென்காசி முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காவல்துறையினர் வரவேற்பு அணிவகுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.

இதையும் படிக்க : Tamilnadu CM MK Stalin: 2026 தேர்தலில் பாஜக கனவு பலிக்காது.. மாமல்லபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!

முன்னதாக அக்டோபர் 28, 2025 அன்று கோவில்பட்டி சென்றுள்ள அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கோவில்பட்டியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்துக்கு சென்ற அவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து பார்வையிட்டார்.