சென்னையில் ஓப்பன் டாப் பேருந்து திட்டத்துக்கு கைவிரிப்பு.. சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி.. என்ன காரணம்!

Chennai Open Top Bus: சென்னையில் ஒப்பன் டாப் பேருந்துகளை இயக்கும் திட்டத்தை மாநகர போக்குவரத்துக் கழகம் திடீரென கைவிட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கான முழு காரணம் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சென்னையில் ஓப்பன் டாப் பேருந்து திட்டத்துக்கு கைவிரிப்பு.. சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி.. என்ன காரணம்!

சென்னையில் ஒப்பன் டாப் பேருந்து திட்டம் நிறுத்தம்

Updated On: 

27 Mar 2026 07:15 AM

 IST

சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக மின்சார பேருந்துகள், நவீன மயமான தாழ்தள சொகுசு பேருந்துகள், சென்னை உலா பேருந்துகள் உள்ளிட்டவை இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு சொகுசு ப்ரீமியம் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் ஓட்டுநர் மட்டுமே பணியில் இருப்பார். நடத்துனர் இல்லாத இந்த பேருந்தில் ” சென்னை ஒன் செயலி” வழியாக டிக்கெட்டை முன்பதிவு செய்து பயணிகள் பயணித்து வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் விதமாக வெளிநாடுகளில் இயக்கப்படுவது போன்ற ஓப்பன் டாப் பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்திருந்தது. இந்த வகையான பேருந்தில் 2 அடுக்குகள் இருக்கும் நிலையில், மேல் பகுதியில் திறந்த வெளியுடன் மேலடுக்க இருக்கும்.

சென்னையில் ஒப்பன் டாப் பேருந்துக்கு நோ

இதன் மூலம் மேல் பகுதியில் இருந்தவாறு சென்னையின் அழகை ரசித்தபடி பயணம் செய்யும் வகையில் இந்த பேருந்தானது இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக குளிர்சாதன வசதி இல்லாத 4 பேருந்துகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஓபன் டாப் பேருந்துகளை சென்னையில் இயக்கும் திட்டத்தை திடீரென மாநகர போக்குவரத்து கழகம் கைவிட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க: கோடை தொடங்கும் முன்பே கொளுத்தும் வெயில்… அடுத்த இரு தினங்களுக்கு 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்பு

சென்னை கால நிலை பயணிகளுக்கு வசதியா இருக்காது

ஏனென்றால், கேரள மாநிலத்தின், மூணாறு போன்ற மலைப்பகுதிகளில் இயற்கை அழகை ரசித்தவாறு செல்லும் வகையில் ஓபன் டாப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சுற்றுலா அனுபவத்தை சென்னையில் பயணிகளுக்கும் அளிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த வகையான ஓப்பன் டாப் பேருந்துகளை ஏற்றுவது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டது. இந்த நிலையில், மாநகரப் போக்குவரத்து கழக நிர்வாக காரணங்கள் மற்றும் சென்னையில் நிலவும் கால சூழல் ஓபன் டாப் பேருந்துகள் பயணிகளுக்கு வசதியாக இருக்காது என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.

20 டபுள் டக்கர் குளிர்சாதன வசதியுடைய பேருந்துகள்

அதன் அடிப்படையில், தற்காலிகமாக இந்த திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் இந்த திட்டத்தை மாற்றி அமைத்து, கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்த பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிகிறது. இந்த திட்டம் கைவிடப்பட்டதால், இதற்கு பதிலாக 20 டபுள் டக்கர் குளிர்சாதன வசதி உடைய பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 4 மாதங்களுக்குள் இந்த பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை.. எங்கெல்லாம் தெரியுமா..? வானிலை நிலவரம் இதோ..

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..