வாகன ஓட்டிகளே அலர்ட்… சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எந்த ரூட்ல தெரியுமா?

Chennai Traffic Diversion In purasawalkam : சென்னை புரசைவாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கங்காதீஸ்வரர் கோயிலில் நடக்கும் தேர் ஊர்வலத்தையொட்டி, சுற்றுவட்டார பகுதிகளில் 2025 ஜூன் 6ஆம் தேதியான இன்று காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வாகன ஓட்டிகளே அலர்ட்... சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எந்த ரூட்ல தெரியுமா?

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Updated On: 

06 Jun 2025 06:23 AM

சென்னை, ஜூன் 06 : சென்னையில் புரசைவாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் (chennai traffic changes) செய்யப்பட்டுள்ளது. புரசைவாக்கத்தில் (purasawalkam traffic diversion) உள்ள கங்காதீஸ்வரர் கோயிலில் (gangadeeswarar temple) 2025 ஜூன் 6ஆம் தேதியான இன்று தேரோட்ட விழா நடைபெற உள்ளது. இதனை அடுத்து, அப்பகுதியில் 2025 ஜூன் 6ஆம் தேதியான இன்று காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, பீக் ஹவரில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும்  நிலையில் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதற்கிடையில், மெட்ரோ பணிகளுக்காகவும், பாலம் கட்டுமான பணிகளுக்காகவும்  ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படியான சூழலில், புரசைவாக்கம் பகுதியில் 2025 ஜூன் 6ஆம் தேதியான இன்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டு இருக்கிறது.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஊர்வலம் கங்காதீஸ்வரர் கோயில் நுழைவாயிலில் தொடங்கி, கங்காதீஸ்வரர் கோயில் வீதி, டாக்டர் அழகப்பா சாலை, ஆடியப்பா தெரு, வெள்ளாள தெரு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, வெல்கம் ஹோட்டல் சந்திப்பு வழியாக கங்காதீஸ்வரர் கோயில் நுழைவாயிலில் ஊர்வலம் முடிவடையும்.

இந்த ஊர்வலத்தின்போது, சீரான போக்குவரத்தை உறுதி செய்ய, காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து செய்யப்படுகிறது. அதன்படி, டவ்டன் சந்திப்பிலிருந்து கங்காதீஸ்வரர் கோயில் தெரு நோக்கி வரும் வாகனங்கள் ரிதர்டன் சாலை, ஈ.வி.ஆர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு இலக்கை அடைய முடியும்.

புரசைவாக்கத்தில் இருந்து கங்காதீஸ்வரர் கோயில் தெரு நோக்கி வரும் வாகனங்கள் புரசைவாக்கம் உயர் சாலை, டோவெட்டன் சந்திப்பு, ரிதர்டன், ஈவிஆர் சாலை வழியாக திருப்பி விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த ரூட்ல தெரியுமா?


எழும்பூர் மற்றும் சென்ட்ரலில் இருந்து ஈ.வி.ஆர் சாலையில் வரும் வாகனங்கள் தாசபிரகாஷ் சந்திப்பில் அழகப்பா சாலை நோக்கிச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக ஈ.ஜி.ஏ சந்திப்பு – வாசு தெரு – பர்னபி சாலை – மில்லர்ஸ் சாலை வரை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

பெரம்பூரிலிருந்து பிரிக்லின் சாலை வழியாக புரசைவாக்கம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் மில்லர்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படும். அதற்கு பதிலாக கெல்லிஸ் சந்திப்பு, ஓர்ம்ஸ் சாலை, பொன்னியம்மன் கோயில் சந்திப்பு, ஃப்ளவர்ஸ் சாலை – ஈ.வி.ஆர். சாலை வழியாக இலக்கை அடையலாம்.

ஊர்வலத்தின் போது வெள்ளாள தெரு, ஆடியப்ப தெருவில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. தேர் ஊர்வலப் பாதை முழுவதும் எந்த வாகனங்களும் நிறுத்த அனுமதிக்கப்படாது என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.