சென்னையில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா…இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது!

Chennai Tholkappiyam Park: சென்னையில் உள்ள தொல்காப்பியப் பூங்கா புதுப்பிக்கப்பட்டு இன்று மீண்டும் திறக்கப்பட்டு முழுவதுமாக பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.. இந்தப் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ளும் நேரம் மற்றும் அதற்கான அடையாள அட்டை பெறுவதற்கான கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா...இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது!

சென்னை தொல்காப்பியப் பூங்கா மீண்டும் திறப்பு

Published: 

24 Jan 2026 10:07 AM

 IST

சென்னை அடையாறு பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் தொல்காப்பிய பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் அடையாறு உப்பங்கழியை சீரமைத்து 58 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 2011- ஆம் ஆண்டு இந்த பூங்காவை கருணாநிதி திறந்து வைத்தார். ஆனால், காலப்போக்கில் பூங்கா போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டது. பின்னர், பூங்கா மறுமலர்ச்சி திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ரூ.45.42 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்றது. இந்த பூங்காவில், கண்காணிப்பு கோபுரம், நவீன நுழைவு வாயில், 3.20 கிலோ மீட்டர் நடைபாதை, பார்வையாளர் காட்சியகம், மையம், இணைப்பு பாலம், திறந்த வெளி அரங்கம், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, கண்காணிப்பு கேமராக்கள், சிற்றுண்டியகம், புதிய கழிப்பறைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.

பூங்காவை திறந்து வைத்த முதல்வர் மு. க.ஸ்டாலின்

இந்த பூங்காவானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல்வர் மு. க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், இந்த பூங்கா முறையாக பயன்பாட்டுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், பூங்காவில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், பூங்காவில் கூடுதல் நபர் அனுமதிக்கப்படுவதாகவும், அவர்களுக்கான அடையாள சீட்டு கட்டணம் குறைக்கப்படுவதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க: தாம்பரம்-திருவனந்தபுரம் அம்ரித் பாரத் ரயில் புறப்படும் நேரம்…தெற்கு ரயில்வே அறிவிப்பு!

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா மீண்டும் திறப்பு

அதன்படி, தொல்காப்பிய பூங்கா இன்று சனிக்கிழமை ( ஜனவரி 24) மீண்டும் திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் 300 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை சுமார் 3000 ஆகவும், அவர்களுக்கான அடையாள அட்டை ஒரு மாதத்திற்கு ரூ. 250, 3 மாதங்களுக்கு ரூ. 750, 6 மாதங்களுக்கு ரூ.1,250, ஒரு வருடத்திற்கு ரூ.2,500- ஆக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் முன்பிருந்த கட்டணத்திலிருந்து 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நேரம்

இந்த பூங்காவில் தினந்தோறும் காலை 6:30 முதல் 8 மணி வரையும், மாலை 4:30 முதல் 6 மணி வரையும் பொதுமக்கள் நடைபெற பயிற்சி மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் நுழைவு சீட்டு பெறுவதற்கான முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு www,crrt.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா பொது மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டுவரப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: “நீலகிரி குயின்” மலை ரயில் நீராவி என்ஜின்…புதுப்பொலிவுடன் சோதனை ஓட்டம்!

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..