AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் தொடரும் மிதமான மழை.. எத்தனை நாட்களுக்கு? எங்கே? முழு விவரம்..

Tamil Nadu Weather Update: ஜனவரி 5, 2026 தேதியான இன்று கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடரும் மிதமான மழை.. எத்தனை நாட்களுக்கு? எங்கே? முழு விவரம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Jan 2026 06:19 AM IST

வானிலை நிலவரம், ஜனவரி 5, 2026: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பதிவாகி வருகிறது. இந்த சூழலில், தெற்கு கேரளா கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

இதன் காரணமாக, ஜனவரி 5, 2026 தேதியான இன்று கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலைமை நாளையும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம்… நயினார் நாகேந்திரன் பகீர் குற்றச்சாட்டு

அதேபோல், ஜனவரி 7ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், ஜனவரி 8ஆம் தேதி கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என்றும், ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை வரக்கூடிய ஜனவரி 10ஆம் தேதி வரை தொடரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 டிகிரி வரை குறையும் வெப்பநிலை:

குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இயல்பு நிலையிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மேலும் சில கட்சிகள் இணையும். தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக ஆட்சி – அமித் ஷா உறுதி

தமிழகத்தைப் பொருத்தவரையில், அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றமில்லை. அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்,

  • ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 32.8 டிகிரி செல்சியஸ்,
  • மதுரையில் 31.5 டிகிரி செல்சியஸ்,
  • கரூரில் 31.2 டிகிரி செல்சியஸ்,
  • கோவையில் 30.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொருத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 29.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.