நாளை முதல் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. எத்தனை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நல்ல மழைப் பதிவு இருந்தது. அக்டோபர் மாதம் மட்டும் நமக்கு 58% இயல்பை விட அதிகமான மழை பதிவு இருந்தது. ஆனால் நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து வறண்டு வானிலையே நிலவுகிறது.
வானிலை நிலவரம், நவம்பர் 14, 2025: தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நவம்பர் 15, 2025 தேதியான இன்று, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நவம்பர் 16, 2025 தேதியான நாளை மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நல்ல மழைப் பதிவு இருந்தது. அக்டோபர் மாதம் மட்டும் நமக்கு 58% இயல்பை விட அதிகமான மழை பதிவு இருந்தது. ஆனால் நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து வறண்டு வானிலையே நிலவுகிறது.
மேலும் படிக்க: திருப்போரூர் அருகே வெடித்து சிதறிய பயிற்சி விமானம்… பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானிகள்
தற்போது வரை ஒரு சில மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது கனமழை பதிவாகி வருகிறது.
இந்த சூழலில் நவம்பர் 16, 2025 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அதேபோல் நவம்பர் 21 ஆம் தேதி வங்கக்கடலில் ஒரு குறைந்த காற்றோட்ட தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் ஒரு புயலும் உருவாகக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக வரக்கூடிய நாட்களில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: கார்த்திகை தீபம் விடுமுறை… சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எங்கிருந்து தெரியுமா?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டப்போகும் மழை:
நவம்பர் 17, 2025 அன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் நவம்பர் 18, 2025 அன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பகல் நேரங்களில் ஒரு அளவு மேக ஓட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மெல்ல மெல்ல தீவிரமடையும் நிலையில், வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 33.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்தவரையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 31.2 டிகிரி செல்சியஸும், மீனம்பாக்கத்தில் 30.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.