AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

12 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

இன்றைய தினத்தைப் பொருத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Jun 2026 06:25 AM IST

ஜூன் 17, 2026: ஒருபுறம் தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தாலும், பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதில் அதிகபட்சமாக மதுரையில் 40.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை மீனம்பாக்கத்தில் 40.5 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 40.2 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 39.8 டிகிரி செல்சியஸ், கரூரில் 39 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலூரில் 38.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வரும் நாட்களில் அதிகரிக்கும் வெப்பநிலை:

வரக்கூடிய நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

இதற்கிடையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரக்கூடிய நாட்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தைப் பொருத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க 6 முக்கிய வழிகள்.. நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன்!

மேலும், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜூன் 18ஆம் தேதியைப் பொருத்தவரையில், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

22ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு:

ஜூன் 19ஆம் தேதியைப் பொருத்தவரையில், தெற்கு கடலோர தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஜூன் 22ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில், குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us