AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வரும் நாட்களில் படிப்படியாக உயரும் வெப்பநிலை.. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடரும் மழை..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் நாட்களில் படிப்படியாக உயரும் வெப்பநிலை.. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடரும் மழை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Jul 2026 15:09 PM IST

ஜூலை 8, 2026: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்து, பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தொண்டியில் 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்தச் சூழலில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பதிவாகி வருகிறது. சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத் முதல் மத்திய கேரளா வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருவதால், இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜூலை 14ஆம் தேதி வரை தொடரும் மழை:

மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 10-ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தொண்டியில் வரலாறு படைத்த வெப்பம்… தமிழகத்தில் மீண்டும் தீவிரமடையும் கோடை!

அதனைத் தொடர்ந்து, ஜூலை 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

படிப்படியாக உயரும் வெப்பநிலை – சென்னையில் எப்படி?

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்றும், இருப்பினும் சற்று உயரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Also Read: கல்லூரி மாணவிக்கு தொடர் லவ் டார்ச்சர்.. அலேக்காக தூக்கிய சிங்கப்பெண் படை.. தூத்துக்குடியில் சம்பவம்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us