Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை வேளச்சேரியில் ரூ.231 கோடி மதிப்பில் மேலும் ஒரு பாலம்.. எந்த பகுதியில் தெரியுமா?

Velachery New Flyover: வேளச்சேரி சர்தார் பட்டேல் சாலை - வேளச்சேரி பிரதான சாலை சந்திப்பிலிருந்து குருநானக் கல்லூரி 200 அடி சாலை சந்திப்பில் மேம்பால வரை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான டென்டரை கோரி உள்ளது சென்னை மாநகராட்சி. 131 கோடி ரூபாய் மதிப்பில் இந்த பாலம் கட்டமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியில் ரூ.231 கோடி மதிப்பில் மேலும் ஒரு பாலம்.. எந்த பகுதியில் தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 12 Jul 2025 12:22 PM

சென்னை, ஜூலை 12, 2025: சென்னை வேளச்சேரி சர்தார் பட்டேல் சாலை – வேளச்சேரி பிரதான சாலை சந்திப்பிலிருந்து குருநானக் கல்லூரி 200 அடி சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தம் கோரியது சென்னை மாநகராட்சி. 231 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் அமைக்கப்படவுள்ளது. சென்னை மாநகராட்சி. குருநானக் கல்லூரி சந்திப்பு (பீனிக்ஸ் மால் சந்திப்பு) மற்றும் ஐந்து ஃபர்லாங் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. வேளச்சேரி குருநானக் கல்லூரி சந்திப்பில் மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. சென்னை வேளச்சேரி என்பது மிகவும் பிரதானமான பகுதியாகும். வேளச்சேரியிலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த பகுதி ஒரு இணைப்பாக இருக்கிறது.

நகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வேளச்சேரி:

சென்னை வேளச்சேரியில் இருந்து திருவான்மியூர், அடையாறு, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், மேடவாக்கம், சோளிங்கநல்லூர், மீனம்பாக்கம், கிண்டி, ஆலந்தூர், சைதாப்பேட்டை, சின்னமலை போன்ற பகுதிகளுக்கு விரைவாக செல்லலாம். சென்னை வேளச்சேரியில் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேளச்சேரி 100 அடி சாலையில் இருந்து ரயில் நிலையம் வரையில் புதிதாக பாலம் திறக்கப்பட்டது.

Also Read: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. மதுரையில் த.வெ.க வின் இரண்டாவது மாநில மாநாடு?

அதேபோல தரமணியில் இருக்கக்கூடிய பேபி நகரில் இருந்து வேளச்சேரி 100 அடி சாலைக்கு மற்றொரு பாலமும் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த இரண்டு பாலங்கள் செயல்பாட்டிற்கு வந்த பின்பு வேளச்சேரி பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்தது. இதனால் அலுவலகம் செல்லும் மக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் உரிய நேரத்திற்கு தாமதம் இன்றி செல்ல ஏதுவாக இது அமைந்தது. அந்த வகையில் தற்போது வேளச்சேரியில் புதிதாக பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய மேம்பாலத்திற்கு டெண்டர் கோரிய சென்னை மாநகராட்சி:

வேளச்சேரி சர்தார் பட்டேல் சாலை – வேளச்சேரி பிரதான சாலை சந்திப்பிலிருந்து குருநானக் கல்லூரி 200 அடி சாலை சந்திப்பில் மேம்பால வரை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான டென்டரை கோரி உள்ளது சென்னை மாநகராட்சி. 131 கோடி ரூபாய் மதிப்பில் இந்த பாலம் கட்டமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் செயல்பாட்டிற்கு வந்தால் வேளச்சேரி 200 அடி சாலை முதல் சென்னை குருநானக் கல்லூரி மற்றும் பீனிக்ஸ் வணிக வளாகம் பகுதியில் இருக்கக்கூடிய போக்குவரத்து நெரிசல் என்பது கணிசமாக குறையும்.

Also Read: அண்ணா ஆப்: சென்னைப் போக்குவரத்துக்கு ஒரே டிக்கெட்! எப்போது வரும்..?

இப்பகுதியில் தினசரி அலுவலக நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியை கடக்க வேண்டும் என்றாலே கிட்டத்தட்ட 30 முதல் 40 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். இதனால் வேலைக்கு செல்லும் நபர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த பகுதியில் கல்லூரி, வணிகவளாகம், ஃபுட் ஸ்ட்ரீட், குடியிருப்பு பகுதி, நட்சத்திர விடுதி என அனைத்துமே அமைந்திருப்பதன் காரணமாக இந்த பகுதி எப்பொழுதுமே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த பாலம் கட்டுவதன் மூலம் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்பதே இல்லாத அளவிற்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது