அரக்கோணம் ரூட்டில் ஏசி பயணம்.. சென்னையில் 2-ஆவது ஏசி மின்சார ரயில் சேவை.. எப்போது தொடங்குகிறது தெரியுமா?

Chennai 2nd AC Electric Train : சென்னையில் கடற்கரை முதல் அரக்கோணம் மார்க்கத்தில் 2- ஆவது குளிர்சாதன வசதி உடைய மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது சோதனை கட்டத்தில் அன்னனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அரக்கோணம் ரூட்டில் ஏசி பயணம்.. சென்னையில் 2-ஆவது ஏசி மின்சார ரயில் சேவை.. எப்போது தொடங்குகிறது தெரியுமா?

சென்னை ஏசி மின்சார ரயில் சேவை

Published: 

24 Apr 2026 11:48 AM

 IST

சென்னையில் கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் அரக்கோணம் வரையும், சென்னை கடற்கரை ரயில் நிலையம் முதல் செங்கல்பட்டு ரயில் நிலையம் வரையும் என இரு மார்க்கங்களில் பீக் ஹவர்சில் கூடுதலாக குளிர்சாதன வசதியுடைய மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்து வந்தது. அதன் அடிப்படையில், கூடுதல் மின்சார ரயில் இயக்குவதற்காக ரயில்வே வாரியம் சார்பில் தெற்கு ரயில்வேக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு குளிர்சாதன வசதியுடைய மின்சார ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்க வேண்டும் என்று ஐ.சி.எஃப். நிர்வாகத்திடம் ரயில்வே வாரியம் கேட்டிருந்தது.

அன்னனூர் யார்டில் நிறுத்தப்பட்டுள்ள மின்சார ரயில்

இதைத் தொடர்ந்து, சென்னை ஐ. சி. எஃப்- இல் 2- ஆவது மின்சார ரயில்கள் தயாரிக்கும் பணி கடந்த 2025- ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. தொடர்ந்து, இந்த குளிர்சாதன வசதியுடைய மின்சார ரயிலை சென்னை கோட்டத்துக்கு தெற்கு ரயில்வே அனுப்பி வைத்திருந்தது. இந்த ரயிலானது தற்போது அன்னனூர் ரயில் நிலையத்தில் உள்ள யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ரயிலில் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, அந்த ரயிலானது சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் அரக்கோணம் வரை சோதனை அடிப்படையில் இயக்கி பார்க்கப்பட உள்ளது.

மேலும் படிக்க: விஜய்யுடன் எந்த காலத்திலும் கூட்டணி அமைக்கும் நிலை பாஜகவுக்கு ஏற்படாது… தேசிய தலைவர் நிதின் நபீன்!

200-க்கும் மேற்பட்ட ரயில்களில் 4 லட்சம் பேர் பயணம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் அரக்கோணம் ரயில் நிலையம் வரையிலான மார்க்கத்தில் தினந்தோறும் 200- க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் தினம்தோறும் சுமார் 4 லட்சம் பேர் வரை பயணம் செய்து வருகின்றனர். தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் பீக் ஹவர்சில் ரயில்களில் கூட்டம் அதிகளவு நிரம்பி வழியும். இதனிடையே, கூடுதல் மின்சார ரயில்கள் மற்றும் குளிர்சாதன வசதி உடைய ரயில்கள் இயக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

12 பெட்டிகளில் 4,914 பேர் பயணம் செய்யலாம்

அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக இந்த வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில்கள் இயக்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போல, செங்கல்பட்டு முதல் கடற்கரை வரையிலான மார்க்கத்திலும் மேலும் ஒரு மின்சார ரயில் இயக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மார்க்கத்தில் ஏசி மின்சார ரயில் சேவை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயிலில் 12 பெட்டிகளில் 1,116 பெயர் அமரும் வகையிலும், 3,798 பேர் நின்று கொண்டும் என மொத்தம் 4,914 பேர் பயணம் செய்யவும் முடியும்.

மேலும் படிக்க: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரலாறு: 1952 முதல் 2026 வரை…

Follow Us
சீனாவிலிருந்து ஈரானுக்கு சென்ற கப்பல் பறிமுதல்: ஏவுகணை இரசாயனங்கள் குறித்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!
படத்தை மிஞ்சும் நிஜ சம்பவம்.. நோயாளிக்கு சிகிச்சை அளித்த பாதுகாப்பு காவலர்..
ஹைதராபாத் குறித்து பெண் பகிர்ந்த அனுபவம்.. இணையத்தில் வைரல்.
ஹைதராபாதில் வினோத சம்பவம்.. காக்கை விலைக்கு வாங்கிய நிகழ்வு..