ஏடிஎம் மூலம் ரேசன் பொருள்களா? இனி கவலையே வேண்டாம்… மத்திய அரசின் பலே திட்டம்!
Ration Items : தமிழகத்தில் ரேசன் பொருள்கள் வழங்குவதில் நிகழும் முறைகேடு தவிர்ப்பதற்காகவும், 24 மணி நேரமும் ரேஷன் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் அன்னபூர்ணா என்ற ரேசன் பாெருள்கள் வழங்கும் ஏடிஎம் இயந்திரம் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

ரேசன் பொருள்கள் 24 மணி நேரமும் வழங்கப்பட உள்ளது
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ், அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களில் எடை குறைவு மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் வாங்காத பொருட்களை ரேஷன் கடையின் ஊழியர்கள் முறைகேடாக எடுத்துக் கொள்வது என்பன உள்ளிட்ட முறைகேடுகள் நிகழ்ந்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. ஏற்கனவே இது போன்ற புகார்கள் எழுந்த நிலையில், ரேஷன் கடையில் ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்து பொருள்கள் வழங்கும் வகையில் மின் சாதனம் அனைத்து கடைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட ரேஷன் அட்டையின் உறுப்பினர்கள் எவ்வளவு பொருட்கள் வாங்கினார்கள் என்பது ஆன்லைன் வழியாக பதிவேற்றம் செய்யப்படும்.
டிஜிட்டல் முறையில் ரேசன் பொருள்கள் விநியோகம்
இதில், சற்று முறைகேடு நிகழ்வது குறைந்ததாக தெரியவந்தது. இந்த நிலையில், இதிலும் நூதனமாக ரேஷன் கடை ஊழியர்கள் ரேஷன் பொருட்களை முறைகேடாக எடுத்து வருகின்றனர். இவற்றை தடுப்பதற்காக டிஜிட்டல் முறையில் உணவுப் பொருட்களை வாங்கும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. அதன்படி, இந்த திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உணவு பொருட்கள் காண கூப்பன் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள், தங்களது செல்போனுக்கு வந்த கூப்பனை ரேஷன் கடையில் காண்பித்து தங்களுக்கான பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: தமிழகத்தை உலுக்கிய மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… மார்ச் 7- இல் வெளியாகிறது தீர்ப்பு!
24 மணி நேரமும் செயல்படும் ரேசன் பொருள் வழங்கும் ஏடிஎம் மெஷின்
இதே போல, 24 மணி நேரமும் ரேஷன் பொருட்களை பெரும் வகையில் ஏ. டி. எம். போல அன்னபூர்ணா என்ற இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் ரேஷன் பொருட்கள் பாக்கெட்டுகளாக வைக்கப்படும். இதில், ரேஷன் அட்டை உறுப்பினர்கள் தங்களது கருவிழி, விரல் ரேகை ஆகியவற்றை பதிவு செய்து ரேசன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இதே போல, கியூ ஆர் குறியீடு மூலமும் ரேஷன் பொருட்களை பெற முடியும். இந்த இயந்திரத்தின் மூலம் 35 வினாடிகளில் 25 கிலோ பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
நாடு முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை
இந்தத் திட்டம் முதல் முறையாக குஜராத் மாநிலத்தில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. விரல் ரேகை பதிவு செய்யும் மின்சாதனம் ரேஷன் கடைகளில் பொருத்தப்பட்ட பிறகும் முறைகேடு நடைபெறுகிறது. இதில், பொருள்கள் வாங்க செல்லும்போது, முதலில் அரிசியை மூட்டையாக கட்டி வைத்துக்கொண்டு, அதனை முதலில் எடை மெஷினில் வைக்கின்றனர். அப்போது, அந்த குடும்ப அட்டைதாரரின் அட்டையில் குறிப்பிட்ட அளவு அரிசி வாங்கியதாக பதிவாகிவிடும். இதன் பின்னர், அவர்களுக்கு வழங்கும் அரிசியில் எடை குறைவாக மூட்டை கட்டி கொடுத்து விடுகின்றனர். இவ்வாறாக நூதன முறைகேடு நிகழ்கிறது.
மேலும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… 12 பேர் ஜாமீன் திடீர் ரத்து… நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு!