நாட்டு வெடிகுண்டை கடித்த குட்டி யானை…வாய் சிதறி பலியான சோகம்…விவசாயியை கைது செய்த வனத்துறை!

Baby Elephant Dies In Erode: ஈரோடு மாவட்டத்தில் நாட்டு வெடி குண்டை கடித்ததில் 2 வயதே ஆன பெண் குட்டி யானை வாய் சிதறி பரிதாபமாக உயிரிழந்தது. இதில், நாட்டி வெடிகுண்டை வைத்த விவசாயியை வனத்துறை கைது செய்தது .

நாட்டு வெடிகுண்டை கடித்த குட்டி யானை...வாய் சிதறி பலியான சோகம்...விவசாயியை கைது செய்த வனத்துறை!

நாட்டு வெடிகுண்டால் குட்டி யானை பலி

Updated On: 

13 Jan 2026 16:36 PM

 IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட குத்தியாலத்தூர் வனப்பகுதியில் கடம்பூர் வனச்சரகத்தைச் சேர்ந்த வன ஊழியர்கள் அண்மையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் 2 வயதே ஆன பெண் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. இது தொடர்பாக, கடம்பூர் வனச்சரக அலுவலர் சிவசங்கரனுக்கு வன ஊழியர்கள் தகவல் தெரிவித்தார். அதன் பேரில், வனச்சரக அலுவலர் சிவசங்கரன் மற்றும் வன கால்நடை உதவி மருத்துவர் சதாசிவம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்து கிடந்த குட்டி யானையின் சடலத்தை சம்பவ இடத்திலேயே உடல் கூறாய்வு செய்தனர். இதில், யானையின் வாய்ப்பகுதி மற்றும் தும்பிக்கை பலத்த சேதம் அடைந்திருந்தது. மேலும், உணவு என நினைத்து கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை குட்டி யானை கடித்ததால், அது வெடித்து குட்டி யானை உயிரிழந்தது தெரிய வந்தது.

விவசாயி வைத்த நாட்டு வெடிகுண்டு

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், கடம்பூர் அருகே உள்ள தொண்டூர் பகுதியை சேர்ந்த விவசாயி காளிமுத்து வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட வந்துள்ளார். அப்போது, அவர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டை சில இடங்களில் வைத்துள்ளார். அதில், ஒரு நாட்டு வெடிகுண்டை குட்டி யானை கடித்ததில், வாய் சிதறி உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, விவசாயி காளிமுத்துவை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை தனிப்படை அமைத்து வனத்துறை தேடி வருகிறது.

மேலும் படிக்க: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரபல ரவிடி வெட்டிக்கொலை.. அதிர்ச்சியூட்டும் பின்னணி.. 8 பேர் கைது..

வனவிலங்குகளை பாதுகாப்பதற்காக…

தமிழகத்தில் வன விலங்குகளை பாதுகாப்பதற்காக தமிழக அரசு மற்றும் வனத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதிலும், குறிப்பாக யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் மனிதர்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வருபவையாகும். இதனால், அவ்வப்போது, வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. சில வனவிலங்குகள் வயல் பகுதியில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

வனவிலங்குகளை வேட்டையாடு நபர்கள்

இதனால், வனவிலங்குகளை விரட்டும் வகையில் சில விவசாயிகள் நாட்டு வெடிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதே போல, சிலர் சட்டத்துக்கு புறம்பாக வனப்பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்து நாட்டு துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு உள்ளிட்டவற்றால் வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். அதன்படியே, தற்போது ஈரோடு மாவட்டத்தில் வனவிலங்குகளை வேட்டையாட வந்த விவசாயி விட்டு சென்ற நாட்டு வெடிகுண்டை கடித்து 2 வயதே ன பெண் குட்டி யானை உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: பொங்கல் பண்டிகை விடுமுறை…கன்னியாகுமரியில் படகு சேவை 3 மணி நேரம் நீட்டிப்பு!

ரஷ்யக் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா.. ரஷ்யா கடும் எதிர்ப்பு!
ஒரு கைக்குட்டையின் விலை ரூ.7 லட்சம் என்றால் நம்புவீர்களா? வேறெங்கும் இல்லை, இந்தியாவில் தான்..
வேகமாக உருகிய பனி.. 'சுனாமி' போல் ஏற்பட்ட வெள்ளம்!!
புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..