கொடைக்கானலில் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே நுழைவு கட்டணம்.. வனத்துறை புதிய அறிவிப்பு!
Only Online Entry Fee In Kodaikanal | கொடைக்கானலை சுற்றிப் பார்க்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், சுற்றுலா தளங்களில் வசூலிக்கப்படும் கட்டண முறை குறித்த முக்கிய தகவலை வனத்துறை வெளியிட்டுள்ளது.
கொடைக்கானல், ஜனவரி 12 : தமிழகத்தின் (Tamil Nadu) மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ள கொடைக்கானலில் (Kodaikanal) நடைமுறை மாற்றம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இனி கொடைக்கானலில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல ஆன்லைன் மூலம் மட்டுமே நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த முக்கிய அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
கொடைக்கானலுக்கு குவியும் சுற்றுலா பயணிகள்
தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தளமாகவும், அதிக மக்கள் சுற்றுலா செல்லும் இடமாகவும் கொடைக்கானல் உள்ளது. பொதுவாக கோடைக்காலம், வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். ஆனால், தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், அஙகு சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாகவே உள்ளது.
இதையும் படிங்க : அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து – 20 பேர் படுகாயம் – என்ன நடந்தது?
அமலுக்கு வரும் புதிய நடைமுறை – முக்கிய அறிவிப்பு
கொடைக்கானலில் உள்ள பில்லர் ராக், பைன் ஃபாரஸ்ட், குணா குகை, போயர் பாய்ண்ட் மற்றும் பேரிஜம் ஆகிய சுற்றுலா பகுதிகளுக்கு செல்வதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுவர். இதன் காரணமாக இந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக தான் அங்கு கட்டணம் வசூலிக்கும் முறை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டு அது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : பராசக்தியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வசனம்? வலுக்கும் எதிர்ப்பு – என்ன நடந்தது?
இனி ஆன்லைன் மூலம் மட்டுமே நுழைவு கட்டணம்
அதாவது கொடைக்கானல் சுற்றுலா தளத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல இனி ஆன்லைன் மூலம் மட்டுமே நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும், பணமாக செலுத்த இயலாது எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் மத்தியில் ஆன்லைன் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ள நிலையில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் முடிவுக்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பணம் செலுத்துவது, ஆன்லைன் பரிவர்த்தனை செய்வது என இரண்டையும் வைக்கலாம் என்றும் ஒன்று மட்டும் வைப்பது சவாலாக இருக்கும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.