ஆயுதபூஜை விடுமுறை.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
ஆயுத பூஜை மற்றும் காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையால் சென்னை தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க காவல்துறை மாற்றங்களை அறிவித்துள்ளது. கனரக வாகனங்களுக்கு மாற்று வழித்தடங்களும், பொதுப் பயணிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் சிறப்புப் பேருந்துகள், ரயில்கள் சேவையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.

சென்னை, செப்டம்பர் 29: ஆயுதபூஜை மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை நாட்கள் வரும் நிலையில்,சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தாம்பர மாநகர காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெருக்கடி பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதனை சீராக்கும் வகையில் போக்குவரத்து காவலர்களும் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். அதேசமயம் விடுமுறை நாட்கள் என்றால் பலரும் குடும்பத்துடன் கார், பைக் போன்ற வாகனங்களில் பல்வேறு இடங்களுக்கும் பயணிப்பதால் சில நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனை தடுக்க மாற்று வழிகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பள்ளி மாணாக்கர்களுக்கு தற்போது காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேசமயம் 2025, அக்டோபர் 1 ஆம் தேதி ஆயுத பூஜை மற்றும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் குடும்பத்துடன் வெளியில் சென்று நேரம் செலவிட பலரும் முடிவு செய்துள்ளனர். மேலும் பூஜை வழிபாட்டில் ஈடுபட பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வருகை தருவார்கள் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் 2025, செப்டம்பர் 30ஆம் தேதி தாம்பரம் பகுதியில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் பற்றி காணலாம்.




Also Read: தீபாவளிக்கு ஊருக்கு போக ரெடியா? கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எங்கெங்கு?
அதன்படி அந்த அறிவிப்பில் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகிறது என கூறப்பட்டுள்ளது செப்டம்பர் 30ஆம் தேதி மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி சந்திப்புகளில் இருந்து எல்லை மாவட்டங்கள் நோக்கி கனரக வாகனங்கள் செல்லுமாறு போக்குவரத்து மற்றும் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம் பற்றி வெளியான அறிவிப்பு
🚨தாம்பரம் மாநகர காவல்- செய்தி குறிப்பு🚨 pic.twitter.com/4WCbtZNCXF
— TAMBARAM CITY POLICE (@COPTBM) September 28, 2025
- சென்னை மற்றும் ஆவடி பகுதியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் பூந்தமல்லியில் இருந்து திருப்பி விடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
- மதுரவாயல் பகுதியில் இருந்து தாம்பரம் ஜிஎஸ்டி நோக்கி வரும் கனரக வாகனங்கள் ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வழியாக ஓட்டேரி நோக்கி வரும் வாகனங்கள் ஒரகடம் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை,திருக்கோவிலூர், வழியாக ஜிஎஸ்டி சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Traffic Changes: தாம்பரம் மக்களே.. போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
- இதே போல் அக்டோபர் 5ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 6ம் தேதி அதிகாலை 4 மணி வரை செங்கல்பட்டு வழியாக வரும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சாலை, வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் வழியாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம் என கூறப்பட்டுள்ளது.
- மேலும் சிங்கப்பெருமாள் கோவில் வழியாக வரும் கனராக வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருப்பி விடப்பட்டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அடைந்து அங்கிருந்து தங்கள் இலக்கை அடையலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
- ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு புதுச்சேரி, சிதம்பரம், கடலூர், நாகப்பட்டினம், சீர்காழி, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் அதை சுற்றி இருக்கும் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் வழித்தடங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- சாலை நெரிசலை தவிர்க்க வழக்கமான இடைவெளியில் நகர்புற ரயில்களும் இயக்கப்படும் எனவும் பயணிகள் இவற்றை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- மேலும் பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து செப்டம்பர் 26 முதல் 30 ஆம் தேதி வரை 2,430 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே போக்குவரத்து சீராக இருக்க வாகன ஓட்டிகள் தாம்பரம் மாநகர காப்போக்குவரத்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.