தமிழ்நாட்டில் 70 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம்? நீக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? வெளியான அறிவிப்பு

SIR Revision Details: விரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் டிசம்பர் 16 முதல் ஜனவரி 15, 2025 வரை பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 70 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம்? நீக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? வெளியான அறிவிப்பு

மாதிரி புகைப்படம்

Published: 

10 Dec 2025 21:15 PM

 IST

சென்னை, டிசம்பர் 10:  தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள எஸ்ஐஆர் (SIR )எனப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4, 2025 அன்று முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த டிசம்பர் 4, 2025 அன்று கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் தித்வா (Ditwah) புயல் காரணமாக வாக்காளர் திருத்தப்பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு டிசம்பர் 11, 2025 நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி நெருங்கும் நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 70 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம்?

விரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அந்த பட்டியலில் இறந்தவர்கள் 25 லட்சம் பேர், வேறு இடத்துக்கு குடி பெயர்ந்தவர்கள் 40 லட்சம் பேர், இரட்டை பதிவு 5 லட்சம் பேர் என மொத்தம் 70 லட்சம் பேரின் பெயர்கள் வரும் டிசம்பர் 16, 2025 அன்று வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன.

இதையும் படிக்க : ஊழல் பட்டியலில் உள்ள திமுகவினருக்கு அதிமுக ஆட்சியில் தண்டனை…எடப்பாடி ஆவேசம்!

வாக்காளர் பட்டியிலில் பெயர் நீக்கப்ப்டடவர்கள் என்ன செய்ய வேண்டும்?

விரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் டிசம்பர் 16 முதல் ஜனவரி 15, 2025 வரை பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். நீக்கப்பட்டவர் உங்கள் ஆதார், முகவரி சான்று ஆகியவற்றுடன் நேரடியாக உங்கள் வாக்கு சாவடி முகவரிடம் இருந்து படிவம் 16ஐ பெற்று விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு வீடுகளுக்கு சென்று எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கப்பட்டன. இதில் 5 கோடியே 18 லட்சம் படிவங்கள் திரும்ப பெறப்பட்டு பெறப்பட்டுள்ளன. இதில், உயிரிழந்தவர்கள் 25 லட்சத்து 72 ஆயிரம் பேர் , தொடர்பு கொள்ள இயலாதவர்கள் 8 லட்சத்து 95 ஆயிரம் பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் 39,27,000 பேர் என மொத்தம் 77,52,000 பேர் விரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை.. என்டிஏ கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ், டிடிவி?

இதற்கான இறுதிப் பட்டியல் டிசம்பர் 16. 2025 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் டிசம்பர் 16, 2025 முதல் ஜனவரி 15, 2025  வரை பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எஸ்ஐஆர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இதுகுறித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எஸ்ஐஆர் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. அதனால் அதன் பணிகள் குறித்து பேச முடியாது என நம்புகிறேன். அரசியல் சாதனத்தின் படி தெளிவான வாக்காளர் பட்டியலை தயார் செய்ய, தேர்தல் ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்றார்.

14 நாட்களிலேயே ஓடிடியில் வெளியான கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம்
எங்கள் எதிர்வினை வருத்தத்துகுரியதாக இருக்கும்.... ஈரான் அரசு எச்சரிக்கை
மோகன்லாலின் எல்367 படத்துக்கும் துரந்தர் படத்துக்கும் உள்ள தொடர்பு?
குட்டி யானையின் பிறந்த நாளை கேக் வெட்டிக்கொண்டாடிய நபர் - வைரலாகும் வீடியோ