77 லட்சம் பெயர் நீக்கம்… அதிர்ச்சியாக இருக்கு… அதிரடி குறித்து அண்ணாமலை கருத்து

Annamalai : தமிழகத்தில் இதுவரை 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர், மேலும் 12.5 சதவிகிதம் வாக்களர் பட்டியலில் இல்லை என்பது ஆச்சரியமாக மட்டும் இல்லாமல் அதிர்ச்சியாக இருப்பதாகவும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

77 லட்சம் பெயர் நீக்கம்... அதிர்ச்சியாக இருக்கு... அதிரடி குறித்து அண்ணாமலை கருத்து

அண்ணாமலை

Published: 

12 Dec 2025 22:04 PM

 IST

சென்னை, டிசம்பர் 12: தமிழகத்தில் இதுவரை 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர், மேலும் 12.5 சதவிகிதம் வாக்களர் பட்டியலில் இல்லை என்பது ஆச்சரியமாக மட்டும் இல்லாமல் அதிர்ச்சியாக இருப்பதாகவும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை (Annamalai) தெரிவித்தார். கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் டிசம்பர் 12, 2025 அன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் தமிழ்நாட்டில் டிசம்பர் 14, 2025 வரை மூன்று நாட்களுக்கு நீடித்திருக்கிறார்கள். அதுவரை எஸ்ஐஆர் (SIR) படிவத்தை சமர்பிக்கலாம். 80 லட்சத்திற்கும் மேல் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் குறைந்தபட்சம் நீக்கப்பட வேண்டும் பாஜக சார்பில் தெரிவித்திருந்தோம் என்றார்.

’77 லட்சம் பேர் நீக்கப்பட்டது அதிர்ச்சியாக இருக்கிறது’

மேலும் பேசிய அவர், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதன் படி 77 லட்சம் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் இறந்துபோனவர்கள், குடி பெயர்ந்தவர்கள், உள்ளிட்ட காரணங்களால் 77 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இது ஆச்சரியத்தை மட்டுமல்லால் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. காரணம் இந்த பட்டியலை வைத்து தான் நாம் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை சந்தித்திருக்கிறோம்.

இதையும் படிக்க : அன்புமணி தொடர்பான கேள்வி…பதில் அளிக்க மறுத்த ஜி.கே.மணி!

அண்ணாமலையின் பதிவு

 

இதுவரை கணக்கிடப்பட்ட வாக்காளர்களில் 12.4 சதவிகிதம் பேர் இல்லை.வருகிற டிசம்பர் 19, 2025 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவிருக்கிறது. அதில் 80 லட்சம் பேர் நீக்கப்பட்டால் வாக்காளர் எண்ணிக்கை 5.5 கோடியாக குறைந்து விடும். இதை நாங்கள் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். ஒவ்வொரு வருடமும் வாக்காளர் பட்டியல் சரி பார்த்தார்கள். அப்படி இருந்தும் எஸ்ஐஆரில் 77 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதனை முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும்.

இதையும் படிக்க : தவறி விழுந்து பலியான கர்ப்பிணி பெண்.. 10 நாட்களுக்கு பின் வெளிவந்த உண்மை.. யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம்..

‘2026 சட்டமன்ற தேர்தல் நியாயமாக நடக்கும்’

இது கடந்த 2024 ஆம் ஆண்டு எஸ்ஐஆரில் பெரிய தவறு நடந்திருப்பதை காட்டுகிறது. அது இன்று எஸ்ஐஆர் மூலம் சரி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இது எஸ்ஐஆரின் முதற்கட்ட வெற்றி தான். இரண்டாவது கட்டமாக வருகிற டிசம்பர் 19 முதல், ஜனவரி 19 வரை நீக்கப்பட்டவர்கள், தெரியாமல் நீக்கப்பட்டவர்களை பாஜக கவனத்தில் கொண்டு வருவோம். இதனால் வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் நியாயமான தேர்தலாக இருக்கும் என்றார்.

ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துமனை... தாயின் உடலை ஸ்ட்ரெச்சரில் சுமந்து சென்ற மகன்கள்
உத்திரப்பிரதேசத்தில் தொடரும் ஓநாய் தாக்குதல்.. பீதியில் பொதுமக்கள்..
திருப்பதி வைகுண்ட ஏகாதசி.. சிறப்பு டிக்கெட்டுகளை அறிவித்த தேவஸ்தானம்..
25 மணி நேரம்... உலகின் நீண்ட நேரம் பயணிக்கும் விமானத்தை அறிமுகப்படுத்திய சீனா