AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“அடிமட்ட தொண்டராக இருக்க விரும்புகிறேன்” அன்புமணி ராமதாஸ் பேச்சு

PMK Anbumani Ramadoss : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். இந்த நிலையில், அதற்கு அன்புமணி ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். கட்சியில் என்றும் அடிமட்ட தொண்டராக இருக்க விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“அடிமட்ட தொண்டராக இருக்க விரும்புகிறேன்” அன்புமணி ராமதாஸ் பேச்சு
அன்புமணி ராமதாஸ்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 30 May 2025 13:55 PM IST

சென்னை, மே 30 : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் (anbumani ramadoss) மீது அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். இந்த நிலையில், அதற்கு அன்புமணி ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், பாமக என்பது யாருடைய தனி சொத்து இல்லை. கட்சியில் என்றும் அடிமட்ட தொண்டராக இருக்க விரும்புகிறேன். அதில் உங்களில் ஒருவனாக முதல் தொண்டனாக நான் களமிறங்குவேன்” என்று தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “நீங்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சி.

“அடிமட்ட தொண்டராக இருக்க விரும்புகிறேன்”

பாமக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, உறுப்பினர்கள் புதுப்பித்தல் சம்பந்தமாக இந்த கூட்டம் நடைபெறுகிறது. தொண்டர்கள் இல்லையெனில் பாட்டாளி மக்கள் கட்சி கிடையாது. பொதுக்குழுவில் நீங்கள்தான் என்னை தலைவராக தேர்வு செய்தீர்கள். பாமக என்பது யாருடைய தனி சொத்து இல்லை.

கட்சியில் என்றும் அடிமட்ட தொண்டராக இருக்க விரும்புகிறேன். கட்சியை தோற்றுவித்த வழிகாட்டி சமூகநீதிப்போராளி மருத்துவர் ராமதாஸின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த நாம் வேகமாக இறங்குவோம். அதில் உங்களில் ஒருவனாக முதல் தொண்டனாக நான் களமிறங்குவேன்” இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தொண்டர்களிடையே பேசினார்.

பாமகவில் உட்கட்சி பிரச்னை


பாமகவில் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணிக்கு இடையே கடந்த ஓராண்டே விரிசல் ஏற்பட்டுள்ளது. தனது பேரன் முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பதவி கொடுத்தது, 2024 மக்களை தேர்தலில் கூட்டணி அமைப்பு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் இருவருக்கும் பிரச்னை நிலவி வருகிறது.

அண்மையில் கூட, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தானே செயல்பட உள்ளதாகவும் ராமதாஸ் அறிவித்தது கட்சிக்குள் பெரும் புயலை கிளப்பியது. இதனால், அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் இடையே உச்சக்கட்டத்தை எட்டியது. 2025 மே 16ஆம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை.

இதனால், ராமதாஸுக்கு அதிருப்தி இருந்தது. இந்த நிலையில், 2025 மே 29ஆம் தேதியான நேற்று அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அதைத் தொடர்ந்து, பாமக இரண்டாக உடைந்துள்ளதாக தெரிகிறது. இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நியமித்து வருவதால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் ஒருபக்கம் நீக்க, அன்புமணி கட்சியில் இணைத்து வருவகிறார். அதாவது, பாமக பொருளாளர் திகலபாமாவை ராமதாஸ் நீக்கியதை அடுத்து, அன்புமணி பொருளாளராக திலகபாமா தொடர்வார் என்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us