அமமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. டிடிவி தினகரன் கொடுத்த விளக்கம்..

தான் வரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்ற அதிரடி முடிவை அறிவித்துள்ளார். தொடர்ந்து, பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் நிலைத்திருக்க அவர் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கலாம். அதை பற்றி நான் கருத்து சொல்ல முடியாது என்று கூறினார்.

அமமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. டிடிவி தினகரன் கொடுத்த விளக்கம்..

டிடிவி தினகரன்

Updated On: 

23 Feb 2026 11:54 AM

 IST

மதுரை, பிப்ரவரி 23: தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பாஜகவுடன் பேசுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழக அரசியலில் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைவர்களின் கூட்டணி முடிவுகளும், தொகுதி பங்கீட்டுக் கணக்குகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. அந்தவகையில், தற்போதைய அரசியல் சூழல், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிலைப்பாடு குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அவ்வாறு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைத்தது. தொடர்ந்து, ராமதாஸ் தரப்பு கூட்டணி முடிவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க: வேலூர் தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டம் – கடைசி நேரத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு

தேர்தல் முடிவும் தனிப்பட்ட நிலைப்பாடும்:

இந்நிலையில், மதுரையில் நேற்று செய்தியாளர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தான் வரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்ற அதிரடி முடிவை அறிவித்துள்ளார். தொடர்ந்து, பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் நிலைத்திருக்க அவர் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கலாம். அதை பற்றி நான் கருத்து சொல்ல முடியாது.

அய்யப்பன் எம்எல்ஏ பேசியதற்கு கண்டனம்:

ஆனால் சட்டமன்றத்தில் அவருடைய ஆதரவு பெற்ற அய்யப்பன் எம்எல்ஏ பேசிய பேச்சு கோடிக்கணக்கான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் மனதை காயப்படுத்தி உள்ளது. சட்டமன்றத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார் என அய்யப்பன் எம்எல்ஏ கூறியது மிகவும் கண்டனத்துக்குரியது. பன்னீர்செல்வம் இதுவரை பகடைக்காய் பார்த்தது புலியாக இருந்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

பாஜகவுடன் இணைந்து அதிமுகவுடன் கூட்டணி:

இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற பிரதமர் மோடி உழைத்து வருகிறார். தற்போது இந்தியா முன்னேறி இருப்பதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடியின் நல்லாட்சி தான். நாங்கள் என்டிஏ(தேசிய ஜனநாயக) கூட்டணியில் இணைந்துள்ளோம். இதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். அதாவது பாஜகவுடன் இணைந்து, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். 1999ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஜெயலலிதா சொன்னது உண்மை தான். ஆனால், 2004-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அதிமுக இணைந்தது.

மேலும் படிக்க: விசில் அடிக்காவிட்டால் உதைப்பேன் – தவெக நிர்வாகியின் பேச்சால் பரபரப்பு

திமுகவை வீழ்த்துவதே நோக்கம்:

ஒவ்வொரு காலகட்டத்திலும் தலைவர்கள் ஒரு முடிவை எடுப்பார்கள். தற்போது திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பாஜகவுடன் பேசுவோம். அதற்கான நேரம் இருக்கிறது. தற்போது கூட்டணி பலமாக இருக்கிறது. நிச்சயம் திமுகவை வீழ்த்துவோம் என்று அவர் கூறினார்.

Related Stories
குளிர்ச்சியான மலை பிரதேசம்.. கண்களுக்கு விருந்தளிக்கும் தேயிலை தோட்டங்கள்.. 3500 அடி உயரத்தில் ரம்மியமாக காட்சியளிக்கும் சுற்றுலா தலம்!
தேஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது… நயினார் நாகேந்திரன் அளித்த பதில்!
விஜய்க்கும்- ஸ்டாலின் சாருக்கும் இடையேதான் தேர்தல் போர்… வேலூரில் விஜய் ஆவேச பேச்சு!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் 161 நாள்கள் மட்டுமே சட்டமன்றம் கூடியுள்ளது.. இது 73 ஆண்டு கால வரலாற்றில் மிகவும் குறைவாகும்!
காங்கிரஸ் கோட்டையாக திகழும் காரைக்குடி.. களமிறங்கும் முடிவில் சீமான்.. வெற்றிக்கு வித்திடுமா அரசியல் வியூகம்!
ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!