மன்னார்குடி எம்எல்ஏவை காணவில்லை… விஜய் குதிரை பேரம் நடத்துகிறார் – டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு

TTV Dhinakaran : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆதரவாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரிடம் கடிதம் வழங்கினார்.  அமமுக எம்எல்ஏ காமராஜ் தவெகவை ஆதரிப்பதாக தகவல் பரவிய நிலையில் ஆளுநரை டிடிவி தினகரன் சந்தித்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

மன்னார்குடி எம்எல்ஏவை காணவில்லை... விஜய் குதிரை பேரம் நடத்துகிறார் - டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு

எடப்பாடி கே.பழனிசாமி - டிடிவி தினகரன்

Updated On: 

08 May 2026 22:41 PM

 IST

சென்னை, மே 8 : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆதரவாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரிடம் கடிதம் வழங்கினார்.  அமமுக எம்எல்ஏ காமராஜ் தவெகவை ஆதரிப்பதாக தகவல் பரவிய நிலையில் ஆளுநரை டிடிவி தினகரன் சந்தித்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க போதுமான ஆதரவு கிடைக்காத நிலையில் அந்த கட்சி பதவியேற்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மே 8, 2026 அன்று ஆளுநரை சந்தித்தார். அப்போது எடப்பாடி கே பழனிசாமியை முதல்வராவதற்கு ஆதரவாக அக்கட்சியின் எம்எல்ஏ எஸ். காமராஜ் சார்பாக ஆதரவு கடிதம் வழங்கினார். முன்னதாக அமமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் தவெகவை ஆதரிக்கவிருப்பதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

‘மன்னார்குடி எம்எல்ஏவை காணவில்லை’

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,  தவெக தலைவர் விஜய் குதிரை பேரம் நடத்துகிறார். அமமுக மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் இன்று மாலையில் இருந்து எங்கே சென்றார் என்று தெரியவில்லை காமராஜை தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.  இது குறித்து ஆளுநரிடம் புகார் தந்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : முழு ஆதரவு – ஆளுநரை சந்தித்து உரிமை கோரிய விஜய்

ஆளுநரை சந்தித்த டிடிவி தினகரன்

 

இது தொடர்பாக ஆளுநருக்கு அளித்த கடிதத்தில்,  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரான நான், தமிழ்நாட்டின் புதிய அரசை அமைப்பதற்கான எடப்பாடி கே. பழனிசாமியின் கோரிக்கைக்கு எனது முழு ஆதரவை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட எங்கள் கட்சியின் வேட்பாளர் எஸ். காமராஜ், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான காமராஜ் மேற்கண்ட கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளார். இதனையடுத்து எடப்பாடி கே. பழனிசாமியை புதிய அரசை அமைப்பதற்கு அழைக்குமாறும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்கச் செய்யுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பக்கம் தவெகவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்ததாக கூறப்பட்ட நிலையில், மாநில செய்தி தொடர்பாளர் கு.கா.பாவலன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பது தொடர்பாக அக்கட்சியின் சார்பில் ஆதரவு கேட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர் நிலை குழுக் கூட்டம் இன்று இணையவழியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழகம் தழுவிய அளவில் கலந்து கொண்ட உயர்நிலை குழு கூட்டத்தின் உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இதையும் படிக்க : காலத்தின் கட்டாயம் – தவெகவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

ஆகையால்,அக் கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துகள் அடிப்படையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நாளை எமது தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். இதற்கிடையே ஊடகங்களில் இரு வேறு மாறுபட்ட கருத்துக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது தமிழக மக்களிடையே ஒரு குழப்பத்தை விளைவிக்கும். அத்துடன் எமது கட்சியின் மீதான நன்மதிப்பையும் சீர்குலைக்கும் போக்காகும். ஆகவே நாளை காலை எமது தலைவர் அவர்கள் எமது கட்சியின் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி