Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிமுகவுக்கு டாடா.. திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி மைத்ரேயன்!

Maitreyan Joins DMK : அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், அதிமுகவின் போக்கு சரியில்லை என்வும் அதிமுகவின் ஸ்விட்ச் போர்டு டெல்லியில் இருப்பதாக மைத்ரேயன் விமர்சித்துள்ளார்.

அதிமுகவுக்கு டாடா.. திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி மைத்ரேயன்!
மைத்ரேயன்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 13 Aug 2025 11:32 AM

சென்னை, ஆகஸ்ட் 13 :  அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் (Maitreyan) திமுக (DMK) தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தான், அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா விலகி திமுகவில் இணைந்த நிலையில், தற்போது அதிமுகவில் இருந்து மைத்ரேயனும் விலகியுள்ளார். அவருக்கு விரைவில் திமுகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படலாம். அண்மையில்  அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. கூட்டணி அமைத்ததில் இருந்தே பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது.  மேலும், பாஜக உடன் கூட்டணி அமைத்தது அதிமுகவில் பல தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக  அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இதனால், பலரும் கட்சியில் இருந்து விலகவும் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில், அதிமுகவின் முக்கிய தலைவர்களின் ஒருவராக இருந்த அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார்.

அவருக்கு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், இலக்கிய அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து,  தற்போது அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்துள்ளார்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில்  முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மைத்ரேயன் திமுகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நான் திமுகவில் இணைந்தேன். தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

Also Read : கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்… உறுதியாக சொன்ன நயினார் நாகேந்திரன்.. நீடிக்கும் குழப்பம்!

திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி மைத்ரேயன்

தமிழ்நாடு பல்வேறு விஷயங்களில் நம்பர் மாநிலமாக இருக்கிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி நிச்சயம். நாளை மறுநாள் சுதந்திர தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் கொடியேற்ற உள்ளார். 2026ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்றும் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றுவார். எனவே, திமுகவின் வெற்றி நிர்ணயிக்கப்பட்டு ஒன்று” என கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவின் போக்கு சரியானதாக இல்லை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்து உள்ளார். ஆனால், இந்த கூட்டணியை அறிவித்ததே மத்திய மைச்சர் அமித் ஷா தான். அதுமட்டுமில்லாமல், இன்றைக்கு கூட்டணி ஆட்சி மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டம் என அமித் ஷா கூறியிருக்கிறார்ஆனால், எந்த அடிப்படையில் அதிமுக பாஜக இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. என தெளிவு இல்லை. அதிமுகவில் பல குழப்பங்கள் உள்ளன.

Also Read : கட்சியில் சேர்ந்த ஒரே வாரம்… அன்வர் ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு.. திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

பல நிர்வாகிகள் மன வருத்தத்தில் உள்ளனர்ஒருசில நபர்கள் திட்டமிட்டு கட்சியை தனது கைப்பிடியில் வைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். எனக்கு அமைப்பு செயலாளர் பதவி கொடுத்தார்கள். ஆனால், என்னை கட்சியில் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதிமுகவின் ஸ்விட்ஜ் போடாக டெல்லி இருக்கிறது. டெல்லி என்ன சொல்கிறதோ அந்த கட்டுப்பாட்டில் தான் அதிமுக உள்ளது” என கூறினார்.