நெற்பயிர்களை கொள்முதல் செய்யவில்லை என்றால், எதற்கு இந்த அரசு? எடப்பாடி பழனிசாமி கேள்வி..
Edappadi Palaniswami: அதிமுக ஆட்சியில் ஒரு நாளுக்கு ஆயிரம் நெல் மூட்டைகள் எடையிடப்பட்டன. இரவு பகலென பாராமல் 100 நாட்கள் போராடி நுழைவுத்த நெற்பயிர்களை இந்த திமுக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், எதற்காக இந்த அரசு?” என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

தஞ்சை, அக்டோபர் 23, 2025: வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை பதிவாகி வருவதால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் ஏக்கர் கணக்கில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியை அறிந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக தஞ்சை மாவட்டத்திற்கு விரைந்து சென்று நேரில் பல ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விவசாயிகளை முற்றிலுமாக புறக்கணித்த அரசாகத்தான் இன்றைய திமுக அரசு உள்ளது” என தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இது வலுப்பெறும் என கணிக்கப்பட்ட நிலையில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் படிப்படியாக மழையின் தீவிரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: சிவகங்கையில் நாளை முதல் 31 வரை 144 தடை – விவரம் இதோ
நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்:
ஆனால் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலும் வயல் வெளிகளில் சுமார் இரண்டு முதல் மூன்று அடி வரை தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
விவசாயிகளை புறக்கணித்த அரசு – எடப்பாடி பழனிசாமி:
டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் தஞ்சையில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்த உடன் தஞ்சை விரைந்தேன். பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்ததுடன், நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டேன்.
“திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே உள்ள நெல்… pic.twitter.com/YpAuusPrwe
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) October 22, 2025
இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சை மாவட்டம் திருவாரூருக்கு விரைந்து நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நெல் கொள்முதல் செய்யாமல் சுமார் 20 நாட்கள் காலதாமதம் செய்துள்ளனர். தொடர்ச்சியான மழையால் நெல் முளைத்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் படும் துன்பங்களை நேரில் பார்த்தேன். தஞ்சாவூர் காட்டூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்ட நெல் முளைத்து பாதிப்படைந்துள்ளது. உடனடியாக நெல் கொள்முதல் செய்யாததே இதற்குக் காரணம்,” என தெரிவித்தார்.
மேலும் படிக்க: படிக்க சொல்லியதால் தாயை கத்தியால் குத்திய மகன் – பரபரப்பு தகவல்
மேலும் அவர் கூறியதாவது, “நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தபோது அங்கு இருந்த லோட்மேன் ஒருவர், ‘ஒரு நாளுக்கு 800 முதல் 900 மூட்டைகள் தான் எடையிடப்படுகிறது’ என்று கூறினார். திமுக அமைச்சர் தவறான கருத்தை பதிவு செய்துள்ளார். இது விவசாயத்துக்கு விரோதமான செயல். அதிமுக ஆட்சியில் ஒரு நாளுக்கு ஆயிரம் நெல் மூட்டைகள் எடையிடப்பட்டன. இரவு பகலென பாராமல் 100 நாட்கள் போராடி நுழைவுத்த நெற்பயிர்களை இந்த திமுக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், எதற்காக இந்த அரசு?” என கேள்வி எழுப்பினார்.