அதிமுகவில் சலசலப்பு.. 5ம் கட்ட சுற்றுப் பயணத்திற்கு தயாரான இபிஎஸ்.. விவரம் வெளியீடு

Edappadi Palanisamy Campaign : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் 5ஆம் கட்ட சுற்றுப் பயணத்தை இபிஎஸ் அறிவித்துள்ளார். 2025 செப்டம்பர் 17ஆம் தேதி 26ஆம் தேதி நாமக்கல், கரூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் சலசலப்பு.. 5ம் கட்ட சுற்றுப் பயணத்திற்கு தயாரான இபிஎஸ்.. விவரம் வெளியீடு

எடப்பாடி பழனிசாமி

Updated On: 

07 Sep 2025 11:08 AM

 IST

சென்னை, செப்டம்பர் 07 : அதிமுக (AIADMK) பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 5ஆம் கட்ட சுற்றுப்பயணம் (Edappadi Palanisamy Campaign) குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 5ஆம் கட்ட சுற்றுப் பயணத்தில் தருமபுரி, நாமக்கல், கரூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தனது பரப்புரையை மேற்கொள்கிறார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளன. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுக தேர்தலுக்கு ஓராண்டு முன்பே, தனது சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளது. ஜெயலலிதா பாணியில் கொங்கு மண்டலத்தில் இருந்து 2025 ஜூலை 7ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்கினார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தில் மக்களை சந்தித்து வருகிறார். இதுவரை எடப்பாடி பழனிசாமி 52 லட்சம் மக்களிடையே பேசி, 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

இந்த பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சித்தும், ஒவ்வொரு தொகுதிக்கான பிரச்னைகளை அறிந்து, அதற்கு ஏற்ப வாக்குறுதிகளையும் அவர் கூறி வருகிறார். இதுவரை மூன்று கட்ட பிரச்சாரத்தை முடித்த எடப்பாடி பழனிசாமி, 2025 செப்டம்பர் 1ஆம் தேதி 4ஆம் கட்ட சுற்றுப் பயணம் தொடங்கியது. இந்த நிலையில், தற்போது 5ஆம் கட்ட சுற்றுப் பயணத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Also Read : செங்கோட்டையனின் கட்சி பொறுப்பு பறிப்பு.. அதிமுக தலைமை அறிவிப்பு!

5ம் கட்ட சுற்றுப் பயணத்திற்கு தயாரான இபிஎஸ்


இந்த  5ஆம் கட்ட சுற்றுப் பயணம் 2025 செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.  அதன்படி, 2025 செப்டம்பர் 17,18ஆம் தேதிகளில் தருமபுரி மாவட்டத்திலும், 2025 செப்டம்பர் 19,20,21ஆம் தேதிகளில் நாமக்கல் மாவட்டத்திலும், 2025 செப்டம்பர் 23,24ஆம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்திலும், 2025 செப்டம்பர் 25,26ஆம் தேதிகளில் கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்று பபயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் சலசலப்பு

அதிமுகவில் தற்போது உட்கட்சி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருந்தார். ஒன்றுப்பட்ட அதிமுகவிற்கான வேலைகளை அடுத்த 10 நாட்களுக்குள் எடப்பாடி பழனிசாமி முடிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் தாங்களே அந்த பணிகளை மேற்கொள்வோம் எனவும் கூறியிருந்தார்.

Also Read : ’நயினார் நாகேந்திரன் சரியில்ல’ கூட்டணி விவகாரத்தில் தினகரன் பகீர் குற்றச்சாட்டு

ஆனால், அதிமுகவில் அவர் வகித்த வந்த இரண்டு பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.  இதனை அடுத்து, செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 1000க்கும் மேற்பட்டார் கட்சி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். மேலும், இந்த விஷயத்தில் செங்கோட்டையனை தவிர, தங்கமணி, வேலுமணி, அன்பழகம், நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோரும் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் உள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் மவுனம் காத்து வருகின்றனர். எனவே, அதிமுகவில் அடுத்த என்ன நடக்கும் என்ற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளனர் என்பது  குறிப்படத்தக்கது.