வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி.. நூலிழையில் உயிர் தப்பிய பாமக பிரமுகர்.. தஞ்சையில் பதற்றம்
PMK Leader Escapes Bomb Attack : தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரும், பாமக பிரமுகருமான ம.கஸ்டாலின் மீது மர்ம கும்பர் வெடி குண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாமக பிரமுகர் ம.க.ஸ்டாலின் நூலிழையில் உயிர் தப்பினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக நிர்வாகி மீது கொலை முயற்சி தாக்குதல்
தஞ்சாவூர், செப்டம்பர் 06 : தஞ்சாவூர் மாவட்டத்தில் பாமக பிரமுகர் ம.க.ஸ்டாலின் மீது மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தெடர்பாக சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது. இந்த கொலை முயற்சி தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தமிழக்ததில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. குறிப்பாக, அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்படுவது அண்மைக் காலங்களில் தொடர்ந்து வருகிறது. இதுபோன்ற கொலை சம்பவங்கள் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தஞ்சாவூரில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.
அதாவது, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். இவர் பாமக நிர்வாகியாக இருந்து வருகிறார். வஇர் வடக்கு மாவட்ட செயலாளரும், வன்னியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும் ம.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். இவர் ஆடுதுறை பேரூராட்சி தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் தினமும் தனது அலுவலகத்தில் பணிகளை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், 2025 செப்டம்பர் 5ஆம் தேதியான நேற்று காலை தனது ஆதரவாளர்களுடன் ம.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வந்திருக்கிறார்.
Also Read : 3 குழந்தைகளை கொன்ற தந்தை.. பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்.. ஆந்திராவில் ஷாக்
வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி
அப்போது, 10 பேர் கொண்ட கும்பல், அங்க காரில் வந்துள்ளது. அங்கு வந்த கும்பல், பெட்ரோல் குண்டை வீசித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த கும்பல் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களுடன் அலுவலகத்தில் இருக்கும் பொருட்களையும், அலுவலகத்தில் இருந்த சிலரையும் தாக்கியது. இதில் நல்வாய்ப்பாக ம.க.ஸ்டாலின் உயிர் தப்பினார்.
மர்ம கும்பல் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் ம.க.ஸ்டாலின் அங்கிருந்து தப்பிச் சென்று, அருகில் இருந்த நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து பூட்டிக் கொண்டார். இதனால், அவர் உயிர்தப்பினார். இதனை அடுத்து, அந்த கும்பல் அலுவலகத்தில் இருந்த சிலலை தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
உயிர்தப்பிய பாமக நிர்வாகி
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
Also Read : தண்ணீர் வாளியில் மூழ்கி 8 மாத குழந்தை பலி.. வீட்டில் விளையாடியபோது விபரீதம்.. ஆவடியில் அதிர்ச்சி!
ம.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் இளையராஜா மற்றும் அருண் ஆகிய இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட பாமக தொண்டர்களும், வன்னியர் சங்க உறுப்பினர்களும் பேரூராட்சி அலுவலகத்தில் ஒன்றுகூடி, கும்பகோணம்-மயிலாடுதுறை-சூரியனார்கோவில் சந்திப்பு சந்திப்பில் பயன்படுத்தப்படாத டயர்களை எரித்தும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, ஆர்ப்பாட்டம் வாபஸ் பெற்றனர். ஆடுதுறையில் அமைதியை நிலைநாட்டுவதற்காக அங்கு போலீசார் குவிந்துள்ளனர்.