எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..

பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் வணிக எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில் இந்த நிலை தொடர்வதால் உணவகங்களில் உணவு தயாரிக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சில உணவகங்கள் நாளை முதல் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..

கோப்பு புகைப்படம்

Updated On: 

10 Mar 2026 15:53 PM

 IST

சென்னை, மார்ச் 10, 2026: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் கிடைக்காமல் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலைமை மேலும் தீவிரமடையாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுத்து, தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும் இதற்கு மாநில அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்:

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் காரணத்தினால், ஈரான் ஹார்மோஸ் நீரிணையை மூடியுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியாகத்தான் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது இது மூடப்பட்டுள்ள சூழலில் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அதே சமயம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலருக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

எரிவாயு தட்டுப்பாடு:

இந்த நிலை நீடித்தால் இந்த விலை மேலும் உயரக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் வணிக எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில் இந்த நிலை தொடர்வதால் உணவகங்களில் உணவு தயாரிக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சில உணவகங்கள் நாளை முதல் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!

இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இந்த நிலைமை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

மத்திய மாநில அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்:

அதே சமயம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த நிலைமை மேலும் மோசமடையாமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் – இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து, தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் செயல்களை விடுத்து, தமிழகத்தில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும்.

மேலும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ‘அம்மா உணவகங்கள்’ மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

Follow Us
Related Stories
கொலை, கொள்ளை, போதை… தமிழகத்தின் பாதுகாப்பு நிலை கேள்விக்குறி
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..