Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

70 ஐபிஎஸ் அதிகாரிகள், 9 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. யார் யாருக்கு என்ன பொறுப்பு?

IAS IPS Transfer: சட்டம் ஒழுங்கு, குற்றத் தடுப்பு, உளவுத்துறை, ஆயுதப்படை, போக்குவரத்து, பயிற்சி மற்றும் நிர்வாகப் பிரிவுகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளின் தலைமை அதிகாரிகள் ஆகியோருக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

70 ஐபிஎஸ் அதிகாரிகள், 9 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. யார் யாருக்கு என்ன பொறுப்பு?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 31 Dec 2025 09:00 AM IST

சென்னை, டிசம்பர் 31, 2025: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 70 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணை (நிலை எண்: 4619) 2025 டிசம்பர் 30ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின் மூலம் காவல் துறையில் விரிவான நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூன்று டிஜிபிக்கள் உட்பட மொத்தம் 30 மூத்த அதிகாரிகளுக்கு முக்கிய பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் காவல் துறையின் செயல்திறன் மற்றும் மேற்பார்வை அமைப்பு மேலும் வலுப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்:


அரசாணையில், சட்டம் ஒழுங்கு, குற்றத் தடுப்பு, உளவுத்துறை, ஆயுதப்படை, போக்குவரத்து, பயிற்சி மற்றும் நிர்வாகப் பிரிவுகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளின் தலைமை அதிகாரிகள் ஆகியோருக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: மக்களே இதை நோட் பண்ணூங்க.. இன்றும் நாளையும் அரசு இ சேவை மையம் செயல்படாது..

மேலும், 9 ஐஏஎஸ் அதிகாரிகளும் பல்வேறு துறைகளில் புதிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக உள்துறை, நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் தொடர்புடைய முக்கிய பணிகளைக் கவனிக்கும் வகையில் இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நிலை உறுதியாக பேணப்பட வேண்டும் என்பதே இந்த விரிவான நிர்வாக மாற்றங்களின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.

யார் யாருக்கு என்ன பொறுப்பு?

இந்த உத்தரவின்படி, ஹர் சஹாய் மீனா, இ.ஆ.ப., கூடுதல் டிஜிபியாக இருந்து ஆணையர் – ஆயுதப்படை மற்றும் ஆயுதக் களஞ்சியம் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். திரு தேவ் ராஜ் தேவு, இ.ஆ.ப., கூடுதல் டிஜிபி நிலையில் இருந்து காவல் பயிற்சி கல்லூரி இயக்குநர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். டேவிட்சன் தேவாசீர்வாதம்- சட்டம் -ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த இவர், பதவி உயர்வு பெற்று, ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.

மேலும் படிக்க: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க பிரத்யேக செயலி.. இன்று அறிமுகம் செய்கிறார் மு.க.ஸ்டாலின்..

மேலும், சி. கோபால் சந்திர ராஜ், இ.ஆ.ப., தமிழ்நாடு ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் சட்டம் – ஒழுங்கு கட்டுப்பாட்டை மேம்படுத்தும் வகையில் பல மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரிகள் தரப்பில், சத்தியபிரத சாகு, இ.ஆ.ப., உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் முக்கிய நிர்வாகத் துறைகளில் மறுநியமனம் செய்யப்பட்டுள்ளனர். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, உள்துறை சார்ந்த பிரிவுகள் ஆகியவற்றில் நிர்வாக செயல்திறனை உயர்த்தும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.