ஓடும் ரயிலில் வெளிமாநில தொழிலாளிக்கு கத்தி வெட்டு…சரமாரி தாக்குதல்…4 சிறுவர்கள் கைது!

4 Boys Arrested For Attacking Migrant Worker: சென்னை- திருத்தணி ரயிலில் பயணித்த புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளியை தாக்கி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். இதில், தாக்குதலுக்குள்ளான நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓடும் ரயிலில் வெளிமாநில தொழிலாளிக்கு கத்தி வெட்டு...சரமாரி தாக்குதல்...4 சிறுவர்கள் கைது!

தொழிலாளியை தாக்கிய 4 சிறுவர்கள் கைது

Updated On: 

29 Dec 2025 16:25 PM

 IST

சென்னையில் இருந்து திருத்தணிக்கு புறநகர் ரயில் ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அந்த ரயிலில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். அதே பெட்டியில் 4 சிறுவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், புலம் பெயர்ந்த அந்த வெளி மாநில தொழிலாளியை அந்த சிறுவர்கள் திடீரென கத்தியால் வெட்டி, கொடூரமாக தாக்கத் தொடங்கினர். மேலும், இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இது அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இன்ஸ்டாகிராம் ஐடியை போலீசார் சோதனை செய்ததில், அந்த சிறுவர்கள் குறித்த விவரம் தெரிய வந்தது.

4 சிறுவர்களை கைது செய்த போலீசார்

இதை தொடர்ந்து, இந்த நான்கு சிறுவர்களையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  பின்னர், மூன்று சிறுவர்கள் செங்கல்பட்டில் உள்ள சிறுவர்கள சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். ஒரு சிறுவனின் படிப்பை காரணம் காட்டி நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது. இந்த சிறுவர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த அந்த தொழிலாளி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவர்கள் வெளியிட்ட வீடியோவில் கத்தியை காட்டி மிரட்டுவது போலவும், சினிமா பாடல் ஒலித்தவாறு பதிவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க: 4வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.. சாலை மறியலில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக கைது..

காவல்துறை திறமையை நிரூபிக்க வேண்டிய நேரம்

இது தொடர்பாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: எனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு காவல்துறை தனது திறமையை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாநிலம் தழுவிய படைப்படை நடவடிக்கை உடனடியாக தேவை. சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங்களிலும் பெரிய அளவிலான சோதனை மற்றும் அடையாள சோதனைகள் செய்யப்பட வேண்டும்.

புலம் பெயர்ந்த தொழிலார்கள் பாதுகாப்பு

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசாங்கத்தை மூடி மறைத்து வரும் எதிர்க்கட்சிகள், மாநிலத்தில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த திமுக தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தன. திமுகவின் திராவிட மாடல் சாதனை. போதைப்பொருள் சிறார்களின் கைகளுக்குச் செல்லும்போது, ​​இதுதான் நடக்கும். சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது. தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலத்தில் பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: அடுத்த 7 நாட்கள்.. தமிழகத்தில் தொடரும் மழை.. சென்னையில் எப்படி இருக்கும்?

இன்று முதல் உயரும் ரயில் கட்டணம் - யாருக்கு பாதிப்பு?
டொரண்டோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் பலி
இனி சம்பள அடிப்படையில் தேர்வு - அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு அதிர்ச்சி
இனி ஆதாருடன் APAAR ஐடியும் கட்டாயம்.. CET தேர்வகர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு