அமித் ஷா – எடப்பாடி பழனிசாமியின் 30 நிமிட சந்திப்பு – உண்மையில் என்ன நடந்தது?

EPS–Amit Shah Meet : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசினார். சரியாக 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், 20 நிமிடங்கள் தனியறையில் தமிழக அரசியல் களம் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமியின் 30 நிமிட சந்திப்பு - உண்மையில் என்ன நடந்தது?

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

Published: 

18 Sep 2025 23:02 PM

 IST

கடந்த 2 நாட்களாக இந்திய அளவில் பேசு பொருளாக மாறியிருப்பது அமித் ஷா (Amit Shah) மற்றும் எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு தான். தமிழ்நாட்டில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில் தமிழக அரசியல் சூழல் தீவரமடைந்து வருகிறது. இதற்கு நடுவே கடந்த செப்டம்பர், 17, 2025 அன்று எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.  அவரது பயணித்தின்போது புதிதாக துணைக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற சி.பி.ராதாகிருஷ்ணனையும் சந்தித்தார். ஆனால் அமித் ஷாவுடனான 30 நமிட சந்திப்பு தான் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

30 நிமிடங்கள் நீடித்த அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையேயான சந்திப்பு மொத்தம் 30 நிமிடங்கள் நீடித்தது. அதில் 20 நிமிடங்கள் முற்றிலும் குளோஸ் டோர் சந்திப்பாக நடந்தது. அதிமுகவின் முக்கிய புள்ளிகளான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் கூட வெளியில் காத்திருந்தனர் என்பது இந்த சந்திப்பு எவ்வளவு நுணுக்கமானது என்பதை காட்டுகிறது.

இதையும் படிக்க : எடப்பாடி பழனிசாமி என்னை பார்க்க தயங்குவார்… முதல்வராக்கியது நாங்கள் தான் – டிடிவி தினகரன் விமர்சனம்

சந்திப்பின்போது நடந்தது என்ன?

இந்த சந்திப்பில், அதிமுக மூத்த தலைவர்கள் நேரடியாக அமித் ஷாவை சந்திக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி  கோரிக்கை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், இது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், மற்றொரு அதிகார மையம் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும்் சமீபத்தில் செங்கோட்டையனுடன் நெருக்கமாக இருந்த 6 பேரை கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கினார். அதற்கான காரணத்தை அமித் ஷாவிடம் விளக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், சமீபத்தில் எரோடு மேற்குக் மாவட்டத்தில், செங்கோட்டையனுக்கு நெருக்கமாக இருந்த 6 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கிய விவரத்தையும் எபிஎஸ் அமித் ஷாவிடம் விளக்கினார். இதன் மூலம் கட்சிக்குள் பிரிவினையை தடுக்கவும், தன் தலைமையை வலுப்படுத்தவும் அவர் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க வேண்டும் எனவும் அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இது தென் தமிழகத்தில் தேவர் சமூகத்தின் ஆதரவை பெறும் நோக்கில் இந்த முன்மொழிவு வைக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : ‘முகத்தை மறைக்கவில்லை..கர்ச்சீப்பால் துடைத்தேன்’ எடப்பாடி பழனிசாமி பரபர பேட்டி

எடப்பாடி பழனிசாமி – அண்ணாமலை ஒரே மேடையில் பிரச்சாரம்

அதிமுக-பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் இதற்கு ஆதரவான கருத்துக்களை பகிர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  சமீபத்தில் என்டிஏ கூட்டணியில் இருந்து அமமுக விலகிய நிலையில், திமுகவை எதிர்க்க, இருவரும் ஒன்றாக பிரச்சாரம் செய்வது அவசியம் என விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.