Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu Assembly Elections: 2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சியே.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி..!

Tamil Nadu Chief Minister M.K. Stalin: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் போட்டி தீவிரமடைந்துள்ளது. திமுக, அதிமுக போன்ற முக்கியக் கட்சிகளுடன், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் களமிறங்க உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாதிரி ஆட்சியை மீண்டும் அமைப்பதாக அறிவித்துள்ளார். பாஜகவுக்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது சுவாரசியமாக உள்ளது.

Tamil Nadu Assembly Elections: 2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சியே.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 18 Apr 2025 19:18 PM

சென்னை, ஏப்ரல் 18: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான (2026 Assembly Elections) முன்னெடுப்புகள் தற்போது முதலே தொடங்கிவிட்டது. எந்த கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது..? அடுத்து ஆட்சி யார் அமரப்போகிறார்கள் உள்ளிட்ட கேள்விகளை இப்போது மக்கள் முன்வைத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக – அதிமுக போன்ற கட்சிகள் எப்போதும் முன்னிலை வகிக்கும். திமுக ஆட்சியில் அமைத்தால் அதிமுக எதிர்க்கட்சியாக வரும். அதேநேரத்தில், அதிமுக ஆட்சி அமைத்தால் திமுக எதிர்க்கட்சியாக வரும். இப்படியான சூழ்நிலையில், இந்த முறை நடிகர் விஜய் (TVK Vijay) தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் களமிறங்குவதால், இந்த முறை 2026 சட்டமன்றத்தில் மிகப்பெரிய போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) 2026ல் திராவிட மாடல் ஆட்சி அமையும் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு:


இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு! தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து இந்த மண்ணைப் பாழாக்கத் துடிக்கும் பா.ஜ.க.வுக்கும், அதற்குத் துணைபோகும் இனமானம் இல்லாத அடிமைகளுக்கும் தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சவால் விடுகிறேன்… எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள்! 2026-லும் Dravidian Model ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்! தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்!” என்று தெரிவித்திருந்தார்.

அமித் ஷா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

முன்னதாக, நீட் மற்றும் தொகுதி மறுவரையறை போன்ற பிரச்சினைகளை ஆளும் திமுக தலைகீழ் தந்திரோபாயங்களாக பயன்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்திருந்தார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்தார். அதில், “நீட், மும்மொழிக்கொள்கை, வக்ஃப் திருத்த சட்டம் மற்றும் எல்லை நிர்ணயம் ஆகியவரை சில மாநிலங்களை பாதிக்கக்கூடும். அதனால்தான் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். கவனத்தை திசைதிருப்பவே நாங்கள் இவற்றை சொல்கிறோம் என்று அமித் ஷா கூறியிருந்தார். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், தமிழ்நாடு அமைத்து இந்திய மாநிலங்களுக்காகவும் போராடுகிறது. மாநிலங்களின் உரிமைகளை கோருவது தவறா..?

மாநில ஆளுநர் எதுவும் செய்யாததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அவருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றோம். நீட் விலக்கு அளிக்க முடியும் என்று அமித் ஷாவால் கூற முடியுமா..? இந்தி திணிக்கப்படாது என்று கூற முடியுமா..? தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் (மத்திய) நிதியை பட்டியலிட முடியுமா, எல்லை நிர்ணயம் காரணமாக பிரதிநிதித்துவம் குறையாது என்று உறுதியளிக்க முடியுமா?

நாங்கள் செய்வது திசைதிருப்பல் என்றால், இந்த பிரச்சினைகள் குறித்து நீங்கள் ஏன் தமிழக மக்களுக்கு தெளிவான பதில்களை வழங்கவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

மன அமைதியே முக்கியம்.. Waves மாநாட்டில் அல்லு அர்ஜூன் ஓபன் டாக்!
மன அமைதியே முக்கியம்.. Waves மாநாட்டில் அல்லு அர்ஜூன் ஓபன் டாக்!...
இணையத்தில் கவனம் பெறும் நடிகர் அஜித் குமாரின் பேட்டி
இணையத்தில் கவனம் பெறும் நடிகர் அஜித் குமாரின் பேட்டி...
கமல் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - ஓபனாக பேசிய சிரஞ்சீவி
கமல் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - ஓபனாக பேசிய சிரஞ்சீவி...
ஹிட் 3 படத்தின் வெற்றி... நானி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!
ஹிட் 3 படத்தின் வெற்றி... நானி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!...
பிளே ஆஃப் கனவுடன் RCB, KKR.. வெற்றி பெற்று ஆப்பு வைக்குமா CSK..?
பிளே ஆஃப் கனவுடன் RCB, KKR.. வெற்றி பெற்று ஆப்பு வைக்குமா CSK..?...
ஒன்று சேரும் 4 கிரகங்கள்.. இந்த 6 ராசிக்கு கிடைக்கும் பலன்கள்!
ஒன்று சேரும் 4 கிரகங்கள்.. இந்த 6 ராசிக்கு கிடைக்கும் பலன்கள்!...
எனக்கு அந்த ரோலில் நடிக்கவேண்டும் என்று ஆசை.. நடிகை ரேவதி!
எனக்கு அந்த ரோலில் நடிக்கவேண்டும் என்று ஆசை.. நடிகை ரேவதி!...
14 வருடங்களுக்கு பிறகு மதுரையில் விஜய்! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
14 வருடங்களுக்கு பிறகு மதுரையில் விஜய்! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு...
கம்பேக் கொடுத்த சூர்யா.. ரெட்ரோ எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
கம்பேக் கொடுத்த சூர்யா.. ரெட்ரோ எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!...
பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவார்...
பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவார்......
இந்த தமிழ் சாங்தான் என்னுடைய பேவரைட்.. ஆச்சர்யம் கொடுத்த கோலி!
இந்த தமிழ் சாங்தான் என்னுடைய பேவரைட்.. ஆச்சர்யம் கொடுத்த கோலி!...