Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தனியார் பேருந்துகளுக்கு டஃப் கொடுக்கும் 20 அரசு வால்வோ பேருந்துகள்…எப்போது இயக்கம் தெரியுமா?

Volvo Govt Buses Operational: தமிழகத்தில் 20 வால்வோ சொகுசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகள் இயக்கப்படுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 110 சொகுசுப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான பணிகள் முடிந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன .

தனியார் பேருந்துகளுக்கு டஃப் கொடுக்கும் 20 அரசு வால்வோ பேருந்துகள்…எப்போது இயக்கம் தெரியுமா?
அரசு வால்வோ பேருந்துகள் இயக்கம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 11 Dec 2025 17:17 PM IST

தமிழக அரசுப் போக்குவரத்து துறையில் நாளுக்கு நாள் அரசு பேருந்துகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாள்தள பேருந்துகள், மிதவை பேருந்துகள், மின்சார பேருந்துகள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அரசுப் பேருந்துகளை தனியார் பேருந்துகளுக்கு இணையாக தரம் உயர்த்துவதற்காக இந்த நடவடிக்கையை தமிழக போக்குவரத்து துறை மேற்கொண்டது. அதன்படி, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வால்வோ சொகுசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தன.

20 வால்வோ சொகுசு பேருந்துகள் கொள்முதல்

இதற்காக தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சுமார் 20 வால்வோ சொகுசு பேருந்துகளை கொள்முதல் செய்தன. அதன்படி, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 130 வால்வோ பேருந்துகளை அரசு கொள்முதல் செய்துள்ளது. இந்த பேருந்துகளுக்கான கட்டமைப்பு பணி கர்நாடக மாநிலம், பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில், 110 பேருந்துகள் குளிர்சாதன வசதி இல்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்டதாகும்.

மேலும் படிக்க: ஈசிஆரில் கார் ரேஸ்? மருத்துவ மாணவி மரணம்… 3 பேர் கவலைக்கிடம் – அதிர்ச்சி தகவல்

அரசு போக்குவரத்து கழகத்திடம் பேருந்துகள் ஒப்படைப்பு

மீதமுள்ள 20 பேருந்துகள் இருக்க வசதி மட்டுமே கொண்ட வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகளாகும். தற்போது, இந்த 20 பேருந்துகளுக்கான கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், அந்த பேருந்துகள் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மேலான் இயக்குனர் ஆர். மோகன் கூறியதாவது: தமிழக போக்குவரத்து துறைக்கான வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகளுக்கான கட்டமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், அந்த பேருந்துகளுக்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 20 பேருந்துகள்

இதில், முதல் கட்டமாக 8 பேருந்துகள் சென்னைக்கு அண்மையில் கொண்டு வரப்பட்டன. தற்போது, அனைத்து பேருந்துகளையும் வால்வோ நிறுவனம் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைத்துள்ளது. இதில், 20 பேருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் அடுத்த வாரம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த பேருந்துகளை முதல்வர் மு. க. ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

பண்டிகை காலத்தில் மிகுந்த பயனுள்ளதாக அமையும்

இந்த மாத இறுதி முதல் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை ஆகிய பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால், வெளியூர்களில் இருந்து ஏராளமான பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதற்கு வசதியாக இந்த பேருந்து சேவை மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

மேலும் படிக்க: கோவை செம்மொழி பூங்கா திறப்பு…என்னென்ன அம்சங்கள் உள்ளன!