Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருவொற்றியூரில் ரவுடியை வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல்… குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற பரபரப்பு சம்பவம்

Tiruvottiyur Murder Case: சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி திருவொற்றியூர் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். முன் பகை காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவொற்றியூரில் ரவுடியை வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல்… குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற பரபரப்பு சம்பவம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Dec 2025 08:14 AM IST

சென்னை, டிசம்பர் 11: சென்னை எண்ணூர் (Ennore) பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பை சேர்ந்த பிரபல ரவுடி என கூறப்படும் சத்யா என்பவரை மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இந்த நிலையில் டிசம்பர் 10, 2025 அன்று நள்ளிரவு நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன் பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம், அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே மிகப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ரவுடி வெட்டிப்படுகொலை

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சத்யா. 24 வயதாகும் இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் எண்ணூர் காவல்நிலையத்தில் சரித்திர குற்றவாளி என சத்யா அடையாளபடுத்தப்பட்டுள்ளார். மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எண்ணூர் பகுதியில் விஜய் என்பவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சத்யா முக்கிய குற்றவாளி என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : போக்குவரத்து காவலர் உயிரிந்த வழக்கில் திருப்பம் – தவறை ஒப்புக்கொண்டு கைதான நபர்

இந்த நிலையில் சத்யா டிசம்பர் 10, 2025 இரவு திருவொற்றியூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரை ஒரு கும்பல் பைக்கில் தருரத்தி வந்திருக்கின்றனர். இதனையறிந்த சத்யா உயிர் பயத்தில் அவர்களிடம் இருந்து தப்பிக்க அருகில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் நுழைந்திருக்கிறார். இந்த நிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல் சத்யாவை அவரை வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை

மக்கள் முன்னிலையிலேயே நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தவலறிந்த திருவொற்றியூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சத்யாவின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் சத்யாவை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : கூடலூரில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் யானை.. பொதுமக்களை துரத்தியதால் பரபரப்பு!

முதற்கட்ட விசாரணையில் முன் பகை காரணமாக சத்யா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பழிவாங்கல் நடவடிக்கையாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என அதன் அடிப்பைடியில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதியில் மக்கள் முன்னிலையில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.