எண்ணூர் அனல் மின் நிலையத்தில் விபத்து – 9 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி
Ennore Power Plant Accident : எண்ணூர் அனல் மின் நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணியின் போது, சாரம் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி 9 புலம்பெயர் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, செப்டம்பர் 30 : சென்னைக்கு அருகே எண்ணூர் அனல் மின் நிலைய புதிய அலகு கட்டுமான பணியின்போது ராட்சத வளைவு அமைக்கும் பணியின் போது, சாரம் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி 9 புலம்பெயர் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எண்ணூர் அனல் மின் நிலைய வளாகத்தில் புதிய அலுவலக கட்டுமானம் நடைபெற்று வருகிறது. அந்த பணியில் 30-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், செப்டம்பர் 30, 2025 அன்று, கட்டுமானப் பகுதியின் முகப்பு சாரம் திடீரென சரிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்தனர். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான பணியின்போது விபத்து
இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோது, இன்னொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார். இதனால் மொத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க : திருமணத்தை மீறிய தொடர்பு.. காதலியின் கணவர் அடித்துக்கொலை!
இந்த விபத்தில் கடுமையாக காயமடைந்த பலர் தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் உள்ளூர் மக்கள் மற்றும் தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய அலகு கட்டுமானப் பணியின்போது விபத்து
எண்ணூர் அனல் மின் நிலையத்தில் 660 மெகாவாட் திறன் கொண்ட 2 யூனிட்கள் அணைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மதிப்பு ரூ.7,000 கோடி மதிப்பில் உருவாகும் இந்த பணியை பாரத் மின் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இங்கு நடைபெற்ற கட்டுமானப்பணியின் போது தான் விபத்து நடைபெற்றிருக்கிறது.
இதையும் படிக்க : மாமனார் வீட்டில் விருந்து.. இறால் சாப்பிட்ட புதுமாப்பிள்ளை பலி.. திருமணமான 17 நாளில் சோகம்!
இந்த விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும், மின்வாரியத் தலைவர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த தொழிலாளர்களை சந்தித்து, உயர்தர சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கினார் இந்த சம்பவம் தொழிலாளர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பலியானவர்கள் வேறு மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் என்பதால் அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.