கோவை செம்மொழி பூங்கா திறப்பு…என்னென்ன அம்சங்கள் உள்ளன!
Coimbatore Semmozhi Park Features: கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா இன்று திறக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் 2 ஆயிரம் வகையான 5 லட்சம் தாவரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவை என்னென் அம்சங்கள் என்பதை பார்க்கலாம்.
கோயம்புத்தூரில் கடந்த 2010- ஆம் ஆண்டு செம்மொழி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. அதன்படி, 165 ஏக்கர் இருக்கும் இந்தப் பகுதியில் சுமார் 45 ஏக்கரில் இந்த செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று திறப்பு விழாவுக்காக காத்திருந்தது. இந்த பூங்கா எப்போது திறக்கப்படும் என்று கோவை மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். அதன்படி, கோவை செம்மொழி பூங்கா திறப்பு தேதி அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செம்மொழி பூங்கா இன்று வியாழக்கிழமை காலை (டிசம்பர் 11) திறக்கப்பட்டது.
2 ஆயிரம் வகையான 5 லட்சம் தாவரங்கள் அமைப்பு
இந்த பூங்காவில், செடி, கொடி, பூக்கள், மூலிகை, மரங்கள் என 2000 வகையான சுமார் 5 லட்சம் தாவரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், செயற்கை நீரூற்று, கல்லால் செதுக்கப்பட்ட யானை, வண்ணத்து பூச்சி, சிறுவர், சிறுமிகள் மற்றும் பெரியவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு பொருள்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவானது காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பயன்பாட்டில் இருக்கும்.




மேலும் படிக்க: இனி மழை கிடையாது.. பனிமூட்டம் தான் இருக்கும் – வெதர்மேன் பிரதீப் ஜான்..
செம்மொழி பூங்காவில் நுழைவு கட்டணம்
இந்த பூங்காவுக்கு வரும் பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. செம்மொழி பூங்கா இன்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், காலை முதலே ஏராளமான பொதுமக்கள் பூங்காவின் வாயிலில் குவிய தொடங்கினர். பின்னர், பூங்கா திறக்கப்பட்டு அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தற்போது, இந்த பூங்காவில் ஏராளமான சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் பெரியோர்கள் என பலதரப்பட்ட மக்கள் சுற்றி பார்த்து வருகின்றனர்.
கோவை செம்மொழி பூங்கா வீடியோ
Semmozhi Poonga, Coimbatorepic.twitter.com/zlTbM7KRKB
— Tamil Nadu Infra (@TamilNaduInfra) November 25, 2025
கோவை மாவட்ட மக்கள் உற்சாகம்
இது தொடர்பாக பூங்காவுக்கு வந்திருந்த பொதுமக்கள் கூறுகையில், முதலில் தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கோவை மாவட்டத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது மிகவும் வரவேற்கக் கூடியதாகும். இந்த பூங்கா திறக்கப்பட்டதால் கோவை மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த பூங்காவில் சுமார் 2 ஆயிரம் வகையான மலர்கள், செடிகள், கொடிகள், தாவரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடுவதற்கான பல்வேறு விளையாட்டு பொருள்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் செம்மொழி பூங்கா அமைத்ததற்கு தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தனர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!!