பெண் காவலருக்கு பாலியல் தொல்லை… கைதான எஸ்பி செந்தில்குமார்… விசாரணைக்கு 2 தனிப்படைகள் அமைப்பு!

Kovai SP Senthilkumar: கோவையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டர் செந்தில்குமார் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவானது தீவிர விசாரணை மேற்கொண்டு அதற்கான அறிக்கைகள் விரைவில் சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது.

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை... கைதான எஸ்பி செந்தில்குமார்... விசாரணைக்கு 2 தனிப்படைகள் அமைப்பு!

எஸ்பி செந்தில்குமார் மீதான துன்புறுத்தல் புகாரை விசாரிக்கு 2 குழு அமைப்பு

Published: 

16 Mar 2026 07:10 AM

 IST

கோயம்புத்தூர் மாவட்டம், கோவைபுதூர் பகுதியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 4- ஆவது அணி செயல்பட்டு வருகிறது. இங்கு, தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டராக ( மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரேங்க்) செந்தில்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர், உடன் பணிபுரிந்து வந்த பெண் போலீசாருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதில், கமாண்டர் செந்தில்குமாரால் பாதிக்கப்பட்ட பெண் காவலர்களில் ஒருவர் இது தொடர்பாக கடந்த 2025- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் கடந்த ஜனவரி மாதம் தனது உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன்படி, இந்த புகார் மனுவானது வேலை செய்யும் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லை புகார்களை விசாரிக்கும் விசாகா குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், இந்த புகாரானது ஏ டி ஜி பி அந்தஸ்தில் உள்ள பெண் உயர் அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கமாண்டர் செந்தில்குமார் கைது

இந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் கமாண்டர் செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில், கோயம்புத்தூர் தெற்கு மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கமாண்டர் செந்தில்குமாரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து, கமாண்டர் செந்தில்குமார் கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க: Alandur Constituency Election 2026: வேகமான நகர்புற வளர்ச்சியை கொண்ட ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி.. மக்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்போவது திமுகவா அதிமுகவா?

பாலியல் புகார் குறித்து விசாரிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

இந்த நிலையில், தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டர் செந்தில்குமார் மீதான பாலியல் புகாரை விசாரணை செய்வதற்கு 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையானது தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸ் உயரதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு  முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்பிக்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், இது குறித்து புகார் அளிக்க சென்ற அந்தப் பெண் எஸ்பியை தடுக்க முயன்றதாக மற்றொரு எஸ்பி மீதும் அந்த பெண் எஸ்பி புகார் அளித்திருந்தார்.

பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை

இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள பெண்ணுக்கு உயரிய பொறுப்பில் இருந்த கூடுதல் டிஜிபி பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்போது, இதே போல, எஸ்பி அந்தஸ்தில் உள்ள செந்தில்குமார் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவை அளித்துள்ள சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: கொளுத்தும் கோடை வெயில்.. இடையே ஜில்லுன்னு மழை.. இன்றைய வானிலை நிலவரம்..

Follow Us
100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கிய கடனை திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
பிறந்த குழந்தையை கையில் வாங்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தந்தை - வைரலாகும் வீடியோ
காமிகாஸ் டிரோன் படகுகளை பயன்படுத்தி எண்ணெய் கப்பல்களை தாக்கும் ஈரான்
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததால் சரச்சை - சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கம்