கோவை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி.. ரூ.7 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்.. சிக்கிய 2 பேர்!

Coimbatore Aiport Hydroponic Ganja Seized : கோவை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிங்கப்பூரில் இருந்து கேராளவைச் சேர்ந்த இரண்டு பேர் உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, இரண்டு பேரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கோவை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி.. ரூ.7 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்.. சிக்கிய 2 பேர்!

கஞ்சா பறிமுதல்

Updated On: 

13 Aug 2025 06:40 AM

கோயம்புத்தூர், ஆகஸ்ட் 13 : சிங்கப்பூரில் இருந்து  கோவை விமான நிலையத்திற்கு (Coimbatore Airport) கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை (Ganja Seized) சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்து மிகவும் பரபரப்பாக இருக்கும் விமான நிலையம் கோவை.  கோவையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கோவையில் இருந்து  சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு நேரடி விமான சேவையும் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,  கோவை விமானத்தில் அவ்வப்போது, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து  சட்டவிரோதமாக கடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது கோவை விமான நிலையத்தில்  சம்பவம் நடந்துள்ளது.  அதாவது, சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதாவது, கோவை விமான நிலையத்திற்கு சிங்கப்பூர் விமானத்தில் வந்த சில நபர்கள் ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர் ரக கஞ்சாவை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, கோவை சர்வதேச விமான நிலையத்தில் சுங்க மற்றும் வான்புலனாய்வுத்துறை அதிகாகிரள சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வந்த வெளிநாட்டு விமானங்களில் வந்து இறங்கிய பயணிகளிடம் தீவிர சோதனையில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கிடையில், சிங்கப்பூரில் இருநது கோவை வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது.

Also Read : இரு குழந்தைகளை கொன்ற வழக்கு.. திடீரென அபிராமி எடுத்த முடிவு.. பறந்த உத்தரவு!

ரூ.7 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

அப்போது, இரண்டு பயணிகளின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனை அடுத்து, அவர்களை தனியாக அழைத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்கள் கொண்டு வந்த அனைத்து பைகளிலும் தீவிர சோதனை நடத்தியதில், ரூ.6.7 கிலோ எடை கொண்ட உயர்ரக கஞ்சா சிக்கியது.

அதாவது, ரூ.7 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர்கள் இருவரும் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் பகத்மான் முஜீப் மற்றும் சுகைல் உபைதுல்லா என தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.7 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து, பின்னர் நீதிமன்றக் காவலில் அனுப்பினர். சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பது வெளிநாடுகளில் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வீடுகளுக்குள்ளேயே வளர்க்கப்படம் ஒரு வகையான கஞ்சா செடியாகும்.

Also Read : கணவனின் ஆண் உறுப்பை அறுத்த இரண்டாவது மனைவி.. அதிர்ச்சி சம்பவம்!

அண்மைக் காலமாக தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்த உயர்ரக வகையான கஞ்சா இந்தியாவுக்கு தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, அதே சிங்கப்பூர் விமானத்தில் சுங்கத்துறைக்கு அறிவிக்காமல் ரூ.18.67 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருட்களை கடத்தியதற்காக புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழரசி ஜெயமாணிக்கம் மற்றும் பண்டிதுரை சுப்பையா ஆகிய இரு பயணிகளை அதிகாரிகள் கைது செய்தனர்.