பைக்கில் இருந்து தவறி விழுந்த சிறுமி.. தாய் கண்முன்னே பறிபோன உயிர்.. சென்னையில் ஷாக்

Chennai Road Accident : சென்னை பெரம்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தனது தாயுடன் சென்றுக் கொண்டிருந்த சிறுமி, தவறி விழுந்துள்ளார். இதில், சிறுமி மீது தண்ணீர் லாரி ஏறியுள்ளது. இதனை அடுத்து, சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கண்முன்னே மகள் உயிரிழந்ததை பார்த்த தாய் கதறி அழுதுள்ளார்.

பைக்கில் இருந்து தவறி விழுந்த சிறுமி.. தாய் கண்முன்னே பறிபோன உயிர்.. சென்னையில் ஷாக்

மாதிரிப்படம்

Updated On: 

18 Jun 2025 15:00 PM

 IST

சென்னை, ஜூன் 18 :  சென்னை பெரம்பூர் பகுதியில் தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த சிறுமி மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்த சிறுமி மீது லாரி ஏறியதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் பகுதியை ச்ரந்த யாமினி. இவருக்கு 10 வயதில் சௌமியா என்ற மகள் உள்ளார். அவர் தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். மகள் சௌமியா தினமும் இருசக்கர வாகனத்தில் யாமினி அழைத்து செல்வது வழக்கம். அதன்படியே, 2025 ஜூன் 18ஆம் தேதியான இன்று தனது மகள் சௌமியாவை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு யாமினி அழைத்து சென்றிருக்கிறார்.

பைக்கில் இருந்து தவறி விழுந்த சிறுமி

பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருக்கும்போது, முன்னால் சென்றுக் கொண்டிருந்த வாகனம் திடீரென பிரேக் பிடித்ததால், அதன் மீது மோதி விடாமல் இருப்பதற்காக யாமினியும் சட்டென் பிரேக் பிடித்திருக்கிறார்.

இதனால், பின்னால் அமர்ந்திருந்த சிறுமி சௌமியா தவறி விழுந்துள்ளார். அப்போது, பின்னால் வந்துக் கொண்டிருந்த தண்ணீர் லாரி சிறுமி மீது ஏறி இருக்கிறது. இதில் சிறுமியின் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்புலன்ஸ்,  அதில் இருந்த பணியாளர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பார் என கூறியிருக்கின்றனர்.

தாய் கண்முன்னே பறிபோன உயிர்

இந்த விபத்து தொடர்பாக பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணையை நடத்தினர். இதனை அடுத்து, லாரி ஓட்டுநர் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்முன்னே மகள் உயிரிழந்ததை பார்த்த தாய் கதறி அழுதது சுற்றி உள்ளவர்களை கண்கலங்க வைத்தது.

முன்னதாக, 2025 மே 18ஆம் தேதி சென்னையில் பாடியில் நடந்த விபத்தில் தாய் மற்றும் அவரத மூன்று வயது மகள் உயிரிழந்துள்ளார். பாடி மேம்பாலம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, எதிர்திசையில் வந்த லாரி பைக்கில் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.

பைக்கை ஒட்டி வந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிரிழந்தவர்கள் 34 வயதான பிரியா மற்றும் அவரது மகன் 3 வயதான கரோலின் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
சென்னை எழும்பூரில் வரப்போகுது மெகா அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்… எப்போது தெரியுமா?
20 நாட்களுக்கான கையிருப்பில் வீட்டு சிலிண்டர்கள்.. விற்றுத் தீர்ந்த வணிக சிலிண்டர்கள்.. சென்னையில் ஹோட்டல்கள் மூடல்..
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..
பழங்களில் எலி மருந்து தடவும் சாலையோர வியாபாரி - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ