Rewind 2025: கிரிக்கெட் முதல் கபடி வரை.. 2025ல் சாம்பியன் பட்டத்தை தூக்கிய இந்திய மகளிர் அணிகள்!

Year Ender 2025: 2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி அற்புதமாக விளையாடி, உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றி மகளிர் கிரிக்கெட்டை புதிய உயரத்திற்கு உயர்த்தியது, மேலும் இந்திய பெண்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்பதை நிரூபித்தது.

Rewind 2025: கிரிக்கெட் முதல் கபடி வரை.. 2025ல் சாம்பியன் பட்டத்தை தூக்கிய இந்திய மகளிர் அணிகள்!

இந்திய மகளிர்

Updated On: 

28 Nov 2025 20:27 PM

 IST

2025ம் ஆண்டு இந்திய மகளிர் வீராங்கனைகளுக்கு சிறப்பான ஆண்டு என்றே சொல்லலாம். இந்த 2025ம் ஆண்டு உலக விளையாட்டு அரங்கில் வலுவான செயல்திறனை வெளிப்படுத்தி பல போட்டிகளில் இந்திய மகளிர் அணியும் (Indian Womens Team), வீராங்கனைகளும் சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தினர். இதன்மூலம், இந்திய பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் பல மடங்கு உயர்ந்துவிட்டது என்றே சொல்லலாம். உலக விளையாட்டு அரங்கில் கடைசி 30 நாட்களுக்குள் 2025 ஒருநாள் உலகக் கோப்பை (2025 ICC Odi Womens World Cup)  உள்ளிட்ட 3 உலகக் கோப்பைகளை வென்றதன் மூலம், இந்தியப் பெண்கள் எந்தத் துறையிலும் பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளனர். அதன்படி, 2025ம் ஆண்டு எந்தெந்த விளையாட்டுகளில் இந்திய மகளிர் அணி சாதனை படைத்தது என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: விறுவிறுப்பாக நடந்த மகளிர் கபடி உலகக் கோப்பை.. சீன தைபேயை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!

இந்திய மகளிர் அணியின் சாதனைகள்:

2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை:

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற 2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அற்புதமாக விளையாடி, முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றி மகளிர் கிரிக்கெட் உலகில் புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது. இதுமட்டுமின்றி, இந்திய மகளிர் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்பதை நிரூபித்தது. இந்தப் போட்டியில், இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தங்கள் ஆட்டத்தால் மட்டுமல்லாமல், திறமையையும் உலக விளையாட்டு அரங்கில் நிரூபித்தனர்.

பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை 2025:

இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற முதல் பார்வையற்ற பெண்கள் டி20 உலகக் கோப்பையில் நேபாளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பதிவு செய்தது. பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டிகள் மற்ற கிரிக்கெட்டுகளிலிருந்து வேறுபட்டவை என்றாலும் இந்த வெற்றியும் இந்திய மகளிருக்கும், மாற்று திறனாளிகளுக்கும் புது உத்வேகத்தை கொடுத்தது. பார்வையற்றோர் கிரிக்கெட்டில் பார்வையே இல்லாதவர்கள், மிகக் குறைந்த பார்வை உள்ளவர்கள் மற்றும் ஒரு கண்ணில் மட்டும் பார்வை உள்ளவர்கள் உள்ளனர். இந்திய மகளிர் அணி இந்தப் போட்டியின் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதியில் இலங்கை, அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் நேபாளத்தை தோற்கடித்து முதல் பார்வையற்ற பெண்கள் டி20 உலகக் கோப்பையை வென்றது.

ALSO READ: ஜனவரி 9 முதல் மகளிர் பிரீமியர் லீக்.. அதிரடியாக வெளியான அட்டவணை..!

மகளிர் கபடி உலகக் கோப்பை 2025:

இந்திய அணி 2025ம் ஆண்டு மகளிர் கபடி உலகக் கோப்பையை வென்று தொடர்ச்சியாக 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தூக்கியது. இதன்மூலம், இந்திய மகளிர் கபடி அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து கொண்டது. போட்டி முழுவதும் இந்திய  மகளிர் கபடி அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரையிறுதியில் ஈரானை தோற்கடித்த இந்திய அணி, பின்னர் இறுதிப் போட்டியில் சீன தைபேயை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டு, உலக விளையாட்டு அரங்கில் கபடியை முன்னிலையையும் படுத்தினர்.

பிற விளையாட்டுகளில் இந்திய மகளிர் அணியின் ஆதிக்கம்..

  • தெலுங்கானாவின் தேஜம் நிகாத் ஜரீன் 51 கிலோ பிரிவில் உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
  • நூபுர் ஷெரோன் 80+ கிலோ பிரிவில் உலக குத்துச்சண்டை கோப்பையையும், அருந்ததி 70 கிலோ பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றும் இந்தியாவுக்கு பெருமை பெற்றனர்.
  • உலக ஸ்னூக்கர் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றை அனுபமா ராமச்சந்திரன் படைத்துள்ளார்.
  •  பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி கைகள் இல்லாத போதிலும், தனது கால்களால் அம்பை எய்து உலக பாரா சாம்பியனானார்.
  • உடற்பயிற்சி மற்றும் உடற்கட்டமைப்புத் துறையில் மிஸ் ஜோத்ஸ்னா வெங்கடேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐசிஎன் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று முதலிடம் பிடித்தார்.
  • டென்னிஸில் ஸ்ரீவள்ளி ரஷ்மிகா பாமிடிபதி ஃபெனெஸ்டா ஓபன் தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றார்.
  • கோல்ஃப் விளையாட்டில் இளம் நட்சத்திரம் பிரணவி உர்ஸ் 14 வயதில் ஐஜிபிஎல்லின் முதல் பெண் சாம்பியனாகி வரலாறு படைத்தார்.
திருமணம் குறித்து ஸ்மிருதி மந்தனா எடுத்த முக்கிய முடிவு
இந்திய அரசாங்கத்தின் CNAP அமைப்பு.. இதன் நோக்கம் என்ன?
குளிர் காலத்தில் அதிகளவில் டீ, காபி குடிப்பீர்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை!
லோன் வாங்கியோருக்கு குட்நியூஸ்.. ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!