Women’s Kabaddi World Cup 2025: விறுவிறுப்பாக நடந்த மகளிர் கபடி உலகக் கோப்பை.. சீன தைபேயை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!
Indian Women's Kabaddi Team: 2025 மகளிர் கபடி உலகக் கோப்பை குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியில், தாய்லாந்தை 68-17 என்ற கணக்கில் ஒருதலைப்பட்சமாக தோற்கடித்தது. தொடர்ந்து இரண்டாவது போட்டியில், இந்திய அணி 50-12 என்ற கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற 2025 மகளிர் கபடி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய கபடி அணி, சீன தைபே கபடி அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை (2025 Women’s Kabaddi World Cup) வென்றது. அதன்படி, சீனாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா 35-28 என்ற கணக்கில் வென்றது. இது இந்தியாவின் தொடர்ச்சியான இரண்டாவது உலக சாம்பியன் பட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், இந்திய மகளிர் கபடி அணி புது வரலாறு படைத்தது. இந்திய அணி (Indian Womens Team) தொடக்கத்திலிருந்தே போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது, ரெய்டிங் மற்றும் டிபெண்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு கெத்து காட்டியது. முதல் பாதியில் சற்று முன்னிலை பெற்ற இந்திய அணி, 2வது பாதியில் ஆக்ரோஷமாக விளையாடியது. இதனால், சீன தைபே அணியால் மீண்டும் வர முடியாமல் தவித்தது.
ALSO READ: டி20 உலகக் கோப்பை 2026 அட்டவணை நாளை வெளியீடு.. நேரடி ஒளிபரப்பை எங்கு காணலாம்?
2025 மகளிர் கபடி உலகக் கோப்பையில் மொத்தம் 11 அணிகள் பங்கேற்றன. இதில் வலுவான அணியாக பார்க்கப்பட்ட இந்திய மகளிர் அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் உலகக் கோப்பையை வென்றது. இந்திய கேப்டன் ரிது நேகி மற்றும் துணை கேப்டன் புஷ்பா ராணா தலைமையிலான இந்திய மகளிர் அணி ஆரம்பம் முதலே எதிரணிக்கு சொல்லி சொல்லி பதிலடி கொடுத்தது. அதேநேரத்தில், பைனலில் சஞ்சு தேவியின் சூப்பர் ரெய்டு இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தது.
2025 மகளிர் கபடி உலகக் கோப்பையில் இந்திய அணி வென்றது எப்படி?
Many congratulations Indian Women Kabaddi team for winning the World Cup 🏆
Beating Chinese Taipei has always been tough, but not this time 💪
Wish this event was properly marketed and televised. pic.twitter.com/LyhBQB0XHw— 𝐒𝐮𝐧𝐢𝐥 𝐓𝐚𝐧𝐞𝐣𝐚 🇮🇳 (@iSunilTaneja) November 24, 2025
2025 மகளிர் கபடி உலகக் கோப்பை குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியில், தாய்லாந்தை 68-17 என்ற கணக்கில் ஒருதலைப்பட்சமாக தோற்கடித்தது. தொடர்ந்து இரண்டாவது போட்டியில், இந்திய அணி 50-12 என்ற கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. அடுத்ததாக நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வங்கதேசம் 43-18 என்ற கணக்கில் ஒருதலைப்பட்சமாக வென்றது. அதன்பிறகு நடைபெற்ற நான்காவது போட்டியில் உகாண்டாவை 51-16 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
ALSO READ: பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை.. முத்தமிட்ட இந்திய மகளிர் அணி.. பிரதமர் மோடி வாழ்த்து!
அரையிறுதிப் போட்டியில் ஈரானை எதிர்கொண்ட இந்திய அணி 33-21 என்ற கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறியது. அதேநேரத்தில், இன்று அதாவது 2025 நவம்பர் 24ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி சீன தைபேயை 35-28 என்ற கணக்கில் வீழ்த்தி தொடர்ச்சியாக 2வது முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றது.