Rohit and Virat: இந்திய ஜெர்சியில் விராட் – ரோஹித் அடுத்து எப்போது களமிறங்குவார்கள்..? யாருடன் மோதும் இந்திய அணி?

Indian ODI Series Schedule: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி விராட், ரோஹித்துக்கு கடைசி போட்டியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இருவரும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், டி20 உலகக் கோப்பையிலும் விளையாட மாட்டார்கள். விராட் மற்றும் ரோஹித் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.

Rohit and Virat: இந்திய ஜெர்சியில் விராட் - ரோஹித் அடுத்து எப்போது களமிறங்குவார்கள்..? யாருடன் மோதும் இந்திய அணி?

விராட் கோலி - ரோஹித் சர்மா

Published: 

19 Jan 2026 15:38 PM

 IST

2026ம் ஆண்டு தொடக்கம் இந்திய அணிக்கு (Indian Cricket Team) சிறப்பானதாக அமையவில்லை. சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதாவது 2026ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருடன் தொடங்கிய இந்திய அணி, சொந்த மண்ணில் 1-2 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது. இது இந்தியாவில் நியூசிலாந்து அணி முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று அசத்தியது. இந்தத் தோல்வி இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், மனவேதனையையும் ஏற்படுத்தியிருந்தாலும், அடுத்த சில மாதங்களுக்கு இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாததால், இந்திய அணியின் நட்சத்திரங்களான விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு இது கடைசி போட்டியாக அமைந்தது.

நேற்று அதாவது 2026ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி இந்தூரில் நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இந்த தொடரில் ரோஹித் சர்மாவின் ஆட்டம் மோசமாக இருந்தது. அவர் வெறும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் விராட் கோலி தனது அற்புதமான ஃபார்மைத் தொடர்ந்து, மற்றொரு சதத்தை அடித்தார். விராட் 124 ரன்கள் எடுத்து அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். ஆனால், இந்த சதம் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தரவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது.

விராட்டும் ரோஹித்தும் அடுத்து எப்போது விளையாடுவார்கள்..?

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி விராட், ரோஹித்துக்கு கடைசி போட்டியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இருவரும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், டி20 உலகக் கோப்பையிலும் விளையாட மாட்டார்கள். விராட் மற்றும் ரோஹித் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். எனவே, அவர்களை மீண்டும் பார்க்க அடுத்த ஒருநாள் தொடருக்காக நாம் காத்திருக்க வேண்டும். அதன்படி, இந்திய அணியின் அடுத்த தொடர் ஒருநாள் எப்போது, ​​எங்கே? எனவே, இந்திய அணி அடுத்த ஒருநாள் போட்டிகளில் விளையாட இன்னும் ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

இந்திய அணியின் அடுத்த ஒருநாள் தொடர் வருகின்ற 2026 ஜூலை மாதத்தில் நடைபெறும். அப்போது இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். இந்த சுற்றுப்பயணம் 2026 ஜூலை 1ம் தேதி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருடன் தொடங்கும். அதைத் தொடர்ந்து 2026 ஜூலை 14ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கும். அதன்படி, 6 மாதங்களுக்குப் பிறகு, ரோஹித் சர்மா, விராட் கோலியின் மாயாஜாலத்தைக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்.

Related Stories
IND vs NZ T20 Series: ஒருநாள் தொடர் தோல்வி! இந்தியா – நியூசிலாந்து இடையிலான டி20 தொடர் எப்போது? முழு விவரம் இதோ!
விராட் கோலியின் போராட்டம் வீண் – 41 ரன்களில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம் – தொடரையும் வென்றது!
IND U19 vs BAN U19: மழையால் இந்திய அணிக்கு அடித்த லக்.. வங்கதேசத்தை வீழ்த்தி 2வது வெற்றி!
Shubman Gill: இந்தூரில் தண்ணீர் குடிக்க பயமா? நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை கையோடு கொண்டு வந்த கில்.. ஏன் தெரியுமா?
Vaibhav Suryavanshi: கோலி சாதனை முறியடிப்பு! வங்கதேசத்திற்கு எதிராக சம்பவம் செய்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி!
IND vs NZ 3rd ODI: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி.. இந்தூரில் இந்தியா சாதனை எப்படி?
ஆதார் அட்டைதாரர்களே.. இந்தத் தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்.. அரசு எச்சரிக்கை!!
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!
"பாட்டி.. மொத்த சமோசாவும் காலி".. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..