Virat Kohli Retirement: 4 நாட்களுக்கு ஒருமுறை இதை செய்வேன்.. இதனால் டெஸ்ட் ஓய்வு! முதல் முறையாக மௌனம் கலைத்த கோலி..!

Virat Kohli Test Cricket Retirement: 2025 ஐபிஎல் தொடருக்குப் பின், இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதற்கு முன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். லண்டனில் நடந்த நிகழ்ச்சியில், தனது முடிவுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களை கோலி விளக்கினார்.

Virat Kohli Retirement: 4 நாட்களுக்கு ஒருமுறை இதை செய்வேன்.. இதனால் டெஸ்ட் ஓய்வு! முதல் முறையாக மௌனம் கலைத்த கோலி..!

விராட் கோலி

Updated On: 

09 Jul 2025 18:36 PM

2025 ஐபிஎல் (IPL 2025) தொடருக்கு பிறகு, இந்திய இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான அணி தேர்வுக்கு முன்பு, கேப்டன் ரோஹித் சர்மாவும், இந்திய அணியின் (Indian Cricket Team) நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி (Virat Kohli) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இந்தநிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு, விராட் கோலி இதுகுறித்து மனம் திறந்துள்ளார். லண்டனில் யுவராஜ் சிங் ஏற்பாடி செய்திருந்த ஒரு நிகழ்வில் முதல் முறையாக விராட் கோலி ஓய்வு முடிவு குறித்து பேசினார்.

என்ன சொன்னார் விராட் கோலி..?

நேற்று அதாவது 2025 ஜூலை 8ம் தேதி லண்டனில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் You We Can Foundationக்கு நிதி திரட்டுவதற்காக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, கிறிஸ் கெயில், ரவி சாஸ்திரி, கெவின் பீட்டர்சன் உள்பட உலகின் பல ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரின் மனதிலும் இருக்கும் கேள்வியை நிகழ்ச்சி தொகுப்பாளர் கௌரவ் கபூர், விராட் கோலியிடம் ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு அறிவித்தீர்கள் என்று கேட்டார்.

ALSO READ: லார்ட்ஸில் இந்திய அணியின் சாதனை எப்படி..? சுப்மன் கில் படை மீண்டும் மாயாஜாலத்தை நிகழ்த்துமா..?

இதனால்தான் ஓய்வை அறிவித்தேன் – கோலி

அப்போது விராட் கோலி நேரடியாக பதில் கொடுக்காமல், “நான் 2 நாட்களுக்கு முன்புதான் என் தாடியில் டை அடித்தேன். ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு ஒருமுறை உங்கள் தாடியை கருப்பாக்க வேண்டியிருக்கும்போது, இப்போதுதான் அடஹ்ற்கான நேரம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்” என்றார்.

ரவி சாஸ்திரியை புகழ்ந்த கோலி:

மேடையில் இருந்த முன்னாள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்து விராட் கோலி பேசுகையில், “உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ரவி பாயுடன் நான் பணியாற்றிருக்காவிட்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு இந்த உயரம் கிடைத்திருக்க சாத்தியமே இல்லை. பத்திரிகையாளர் சந்திப்பில் ரவி சாஸ்திரி எனக்கு ஆதரவளித்த விதம் வேறு எங்கும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. அவர் எனது பயணத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்துள்ளார்” என்று தெரிவித்தார்.

விராட் கோலி எப்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிப்புக்கு முன்பே, மே 12, 2025 அன்று கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். முன்னதாக, 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்திருந்தார். கோலியில் கடைசி சர்வதேச தொடர் ஆஸ்திரேலியாவுக்கு (பிஜிடி) எதிராக அமைந்தது.

ALSO READ: காத்திருக்கும் ராகுல் டிராவிட் சாதனை.. முறியடிப்பாரா சுப்மன் கில்..?

விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்கள் மற்றும் 31 அரைசதங்கள் உதவியுடன் 9,230 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 254 ரன்கள் ஆகும். விராட் கோலி தனது டெஸ்ட் வாழ்க்கையில் 7 முறை இரட்டை சதங்களை அடித்துள்ளார்.