Virat Kohli: தொடர்ச்சியாக டக் அவுட்.. விராட் கோலிக்கு அழுத்தமா? – பதான் கேள்வி!

IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் விராட் கோலி தொடர்ச்சியாக இருமுறை டக் அவுட்டானது கிரிக்கெட் உலகில் விவாதமாகியுள்ளது. இர்ஃபான் பதான் இதுபற்றி கூறுகையில், சமூக ஊடக அழுத்தத்தால் பாதிக்கப்படாமல், கோலி தனது பேட்டிங்கை ரசிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Virat Kohli: தொடர்ச்சியாக டக் அவுட்.. விராட் கோலிக்கு அழுத்தமா? - பதான் கேள்வி!

விராட் கோலி

Updated On: 

24 Oct 2025 12:56 PM

 IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்ச்சியாக இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வீரர் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டான சம்பவம் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, “ விராட் கோலி  தொடர்ச்சியாக இரண்டு முறை டக் அவுட் ஆகும் நிகழ்வை இதற்கு முன் ஒருபோதும் நான் பார்த்ததில்லை. இது அழுத்தம் அல்லது பேட்டிங் பார்மில் இல்லாததன் தாக்கமாக கூட இருக்கலாம். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு ஜாம்பவான்கள் மீது சமூக ஊடகங்களின் அழுத்தம் செலுத்தப்படுகிறது. இவை அவர்களைப் பாதிக்காதவாறு நிர்வகிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

சில நேரங்களில் ரன்கள் எடுக்காதபோது நாம் அவர்களுடன் தொடர்ந்து இருப்பது முக்கியமான ஒன்றாகும். இது கடினமான தருணம் என்றாலும், தலைக்கு மேல் வாள் தொங்கும் போது, ​​அதைச் சமாளிப்பது ஒன்றும் எளிதல்ல. விராட் கோலி அந்த அழுத்தத்தை உள்நாட்டில் விளையாடும்போது உணரவில்லை என்று நான் நம்புகிறேன் என்று இர்ஃபான் பதான் தனது யூடியூப் சேனலில் கூறினார்.

Also Read:  கிரிக்கெட் வாழ்க்கை ஓவரா?; விராட் கோலி கொடுத்த தரமான பதிலடி!

மேலும் இரண்டாவது ஒருநாள் போட்டியில், விராட் கோலி தனக்குப் பிடித்த ஃபிளிக் ஷாட்டை விளையாடும்போது ஆட்டமிழந்தார். அப்படியானால் அவர் எப்படி மீண்டு வருவார்?, விராட் கோஹ்லி ஸ்ட்ரைக்கில் இருந்து வெளியேற, குறிப்பாக டக் அவுட் ஆன பிறகு வைத்து பார்த்தால், ஒரு சிங்கிள் ரன்னை விரைவாக எடுக்க விரும்புகிறார் என்று நான் நினைக்கிறேன். இது இயற்கையான ஒன்றாகும்.

இதில் எந்த விரக்தியும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அவர் தனது பேட்டிங்கை தொடர்ந்து ரசிக்க வேண்டும். அவர் நடுவில் நேரத்தைச் செலவிட்டால், ரன்கள் வரும் எனவும் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். 17 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் விராட் கோலி ஒருநாள், டெஸ்ட், டி20 போட்டி என மொத்தம் 40 முறை டக் அவுட்டாகியுள்ளார். இதன் மூலம் அதிகம் டக் அவுட்டானாவர்களின் பட்டியலில் அவர் 5ம் இடத்தில் உள்ளார்.

Also Read:   ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த கோலி.. ஆர்சிபி அணிக்காக விளையாட மாட்டாரா?

டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்ட விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்குப் பின் சுமார் 5 மாதங்களுக்குப் பின் அவர் மீண்டும் ஆஸ்திரேலியா தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார். ஆனால் தனது கேரியரில் முதல்முறையாக அவர் 2 முறை தொடர்ச்சியாக டக் அவுட்டானது ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories
90’s கிட்ஸ்களின் ஃபேவரட்.. ஓய்வு பெற்றார் WWE வீரர் ஜான் சீனா.. கண்ணீர் மல்க விடைகொடுத்த ரசிகர்கள்
IND VS SA 4th T20: இந்தியா-தென்னாப்பிரிக்கா அடுத்த மோதல் எப்போது? முழு விவரம் இதோ!
IPL Auction 2026: சிஎஸ்கே அணிக்கு இந்த வரிசையில் சிக்கல்.. ஐபிஎல் மினி ஏலத்தில் யாரை குறிவைக்கும்..?
IND vs SA 3rd T20: இந்தியா – தென்னாப்பிரிக்கா 3வது டி20 போட்டி.. வெற்றியுடன் 5 முக்கிய சாதனைகளை படைத்த இந்திய அணி!
மிரட்டல் பந்து வீச்சு – தென்னாப்பிரிக்காவை எளிதாக சுருட்டிய இந்தியா – 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
U19AsiaCup : 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா – ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி – என்ன நடந்தது?
தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்