India – Pakistan: மீண்டும் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக சம்பவம்! கபடியில் கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள்!
India vs Pakistan Asian Youth Games: பாகிஸ்தான் கேப்டன் டாஸ் போடும்போது நடுவரும் இந்திய கேப்டன் இஷாந்த் ரதியும் நிற்பதை வீடியோ காட்டுகிறது. நடுவர் இரு கேப்டன்களுடனும் கைகுலுக்குகிறார். பின்னர் பாகிஸ்தான் கேப்டன் ரதியின் கையை குலுக்க தனது கையை நீட்டுகிறார். ஆனால், கேப்டன் ரதி எதையும் கண்டுகொள்ளவில்லை.

2025 ஆசிய கோப்பையில் (2025 Asia Cup) இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலியுடன் கைகுலுக்க மறுத்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இந்திய அணி சூப்பர் ஃபோர் மற்றும் இறுதிப் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் சூர்யகுமார் யாதவும், இந்திய அணி வீரர்களும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை. இதனை தொடர்ந்து, 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையிலான போட்டியிலும் இதுவே நடந்தது. இந்தநிலையில், 2025 ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியிலும் இந்திய கபடி அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததால், அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பையைப் போலவே, இந்தப் போட்டியிலும் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்தது.
2025 மகளிர் உலகக் கோப்பையின் போது ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அவரது குழுவினர் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர். அந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இப்போது, இந்த கைகுலுக்கல் சர்ச்சை கபடி அரங்கையும் எட்டியுள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியர்கள் மத்தியில் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக வீரர்கள் அவ்வாறு செய்ய முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




ALSO READ: மெயில் மூலம் எச்சரித்த பிசிசிஐ! நக்வி ஆசிய கோப்பையை வழங்குவாரா?
இந்திய கபடி அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை:
🚨 BIG! Team India REFUSES to shake hands with Pakistan before the toss at the Asian Youth Games 2025.
Later, India CRUSHED Pakistan 81–26 in a one-sided Kabaddi match 🔥 pic.twitter.com/vrGGr52rOC
— Megh Updates 🚨™ (@MeghUpdates) October 21, 2025
ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது பதிப்பு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கபடி அணிகள் மோதின. பஹ்ரைனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தி 81-26 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இருப்பினும், போட்டிக்கு முன்பு, இந்திய கேப்டன் இஷாந்த் ரதி பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார். இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் கேப்டன் டாஸ் போடும்போது நடுவரும் இந்திய கேப்டன் இஷாந்த் ரதியும் நிற்பதை வீடியோ காட்டுகிறது. நடுவர் இரு கேப்டன்களுடனும் கைகுலுக்குகிறார். பின்னர் பாகிஸ்தான் கேப்டன் ரதியின் கையை குலுக்க தனது கையை நீட்டுகிறார். ஆனால், கேப்டன் ரதி எதையும் கண்டுகொள்ளவில்லை. பாகிஸ்தான் கேப்டன் தனது கையை பின்னால் இழுத்து டி சர்ட்டில் துடைப்பதுபோல் துடைத்து கொண்டார்.
ALSO READ: 50 ஓவர்களும் சுழற்பந்து வீச்சு! வங்கதேசத்திற்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் சம்பவம்!
இந்திய அணியின் அபார வெற்றி:
இந்தப் போட்டியில் இந்திய கபடி அணி சிறப்பாக செயல்பட்டு, பாகிஸ்தானை 81-26 என்ற கணக்கில் தோற்கடித்தது. போட்டி தொடங்கிய ஐந்து நிமிடங்களுக்குள் இந்தியா பாகிஸ்தானை இரண்டு முறை ஆல் அவுட் செய்தது. இதன் பிறகு, பாகிஸ்தானுக்கு மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கவில்லை. பாதி நேரத்தில் இந்தியா 43-12 என முன்னிலை வகித்தது, இரண்டாவது பாதியில், இந்தியா தனது முழு பலத்தை காட்டியது.