IndvsNZ : நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

T20 World Cup Final : டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. 

IndvsNZ : நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

சூர்யகுமார் யாதவ் மற்றும் மிட்செல் சான்ட்னர்

Updated On: 

08 Mar 2026 20:28 PM

 IST

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான இந்த மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டுள்ளனர். இந்த முக்கியமான போட்டியை காண எம்எஸ் தோனி போன்ற பல பிரபலங்களும் வருகை தந்துள்ளனர்.

டாஸ் வென்று நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு

இந்திய அணியை தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான வீரர்கள் களமிறங்கவிருக்கின்றனர்.  டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் இந்தியா முழுமையான ஆதிக்கத்துடன் விளையாடவில்லை என்றாலும், முக்கியமான தருணங்களில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குரூப் சுற்றில் இந்தியா அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை தோற்கடித்து தோல்வியின்றி அடுத்த கட்டத்திற்கு முன்னேறியது. இதனால் இந்தியா போட்டியின் முக்கியமான அணியாக திகழ்ந்தது.

இதையும் படிக்க : IND vs NZ Final: 4வது முறையாக இறுதிப்போட்டியில் இந்தியா.. இதுவரை இந்திய அணி சாதித்தது என்ன?

அகமதாபாத்தில் தோனி வருகை

 

ஆனால் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்கா எதிராக கடுமையான சவால் ஏற்பட்டது. அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. இந்த தோல்வி இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.  அதன் பின் இந்தியா மீண்டும் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தப் போட்டி திரில்லர் படங்களுக்கு நிகராக கடைசி வரை பரபரப்பாக நிலவியது.9

இதையும் படிக்க : T20 World Cup Final: இன்னும் ஒரு ரன் போதும்! எம்.எஸ்.தோனி சாதனை பட்டியலில் இணையும் சஞ்சு சாம்சன்..!

இந்திய அணி மீண்டும் வெற்றி பெற்று ஒரு வரலாற்று சாதனை படைக்கவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால், டி20 உலகக்கோப்பை பட்டத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிகரமாக காக்கும் முதல் அணியாக இந்தியா சாதனை படைக்கும். இதனால் இந்திய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த இறுதிப்போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Follow Us
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு