IND vs ENG Semi Final: அதிரடி மழையில் பயம் காட்டிய இங்கிலாந்து.. இறுதி வரை போராடி பைனலுக்கு முன்னேறிய இந்தியா..!
T20 World Cup 2026 Semi Final: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி பேட்டிங் செய்ய வந்தது. அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 246 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது.

இந்திய அணி
2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) 2வது அரையிறுதி போட்டியில் இன்று அதாவது 2026 மார்ச் 5ம் தேதி இந்தியாவும், இங்கிலாந்து அணியும் (IND vs ENG) மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி பேட்டிங் செய்ய வந்தது. அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்கள் குவித்தது. 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமாக இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே பயம் காட்ட தொடங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய பில் சால்ட் 5 ரன்களில் ஆட்டமிழந்தாலும், பட்லர் 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பிறகு உள்ளே வந்த பெத்தேல் இந்திய பந்துவீச்சாளர்களை அலறவிட்டார்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மிரட்டி 45 பந்துகளில் சதம் அடித்தார். இருப்பினும், இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 246 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடர்ந்து 2வது முறையாகவும், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ALSO READ: சரவெடியாய் வெடித்த சஞ்சு சாம்சன்.. இங்கிலாந்து அணிக்கு 254 ரன்கள் இமாலய இலக்கு!
499 ரன்கள் குவிப்பு:
Marching towards the #Final 👏
A step away from 𝙂𝙡𝙤𝙧𝙮 🏆#TeamIndia is into the #T20WorldCup finale 🥳Scorecard ▶️ https://t.co/LxSBs3EDPx#MenInBlue | #ENGvIND pic.twitter.com/6BBNkNw2aB
— BCCI (@BCCI) March 5, 2026
மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 253 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு இங்கிலாந்து அணி 246 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதன்படி, இந்தப் போட்டியில் மொத்தமாக 499 ரன்கள் குவிக்கப்பட்டன. 254 ரன்கள் என்ற சாதனை இலக்கைத் துரத்திய இங்கிலாந்து, 17 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி மூன்று ஓவர்களில் 45 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜேக்கப் பெத்தேல் மற்றும் சாம் கரன் ஆகியோர் பயம் காட்ட தொடங்கினர்.
இதற்கிடையில், 18வது ஓவரில், ஜஸ்பிரித் பும்ரா தனது கடைசி ஓவரை வீச வந்து, வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இது இந்தியாவுக்கு சாதகமாக மாறியது. தொடர்ந்து, 19வது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியா முதல் பந்தில் சிக்ஸரை விட்டு கொடுத்தாலும், 3வது பந்தில் சாம் கரனை அவுட்டாக்கினார். இங்கிலாந்துக்கு ஒன்பது பந்துகளில் 32 ரன்கள் தேவைப்பட்டது.
அடுத்த மூன்று பந்துகளில் ஹர்திக் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க, 20வது ஓவரின் முதல் பந்திலேயே ஜேக்கப் பெத்தலை 105 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார் ஷிவம் துபே.
ALSO READ: அரையிறுதியில் மீண்டும் ஒரு அசால்ட்.. சொற்ப ரன்களில் அபிஷேக் அவுட்!
சாம்சன்-பும்ரா செய்த சம்பவம்:
இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் 89 ரன்களும், சிவம் துபே 43 ரன்களும், இஷான் கிஷான் 39 ரன்களும் எடுத்தனர். இருவரும் இணைந்து இந்தியா 253 ரன்கள் குவிக்க உதவினார்கள். அதேநேரத்தில், ஜஸ்பிரித் பும்ரா நான்கு ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார்.