Suresh Raina: பந்தய ஆப் விளம்பரம்.. சிக்கலில் சிக்கிய சுரேஷ் ரெய்னா.. அமலாக்கத்துறை சம்மன்!

Suresh Raina Summoned by ED: அமலாக்கத் துறை (ED), சட்டவிரோத ஆன்லைன் பந்தய ஆப் தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை விசாரணைக்கு அழைத்துள்ளது. 1xBet பந்தய நிறுவனத்தின் பிராண்ட் தூதராக இருந்த ரெய்னா, பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

Suresh Raina: பந்தய ஆப் விளம்பரம்.. சிக்கலில் சிக்கிய சுரேஷ் ரெய்னா.. அமலாக்கத்துறை சம்மன்!

சுரேஷ் ரெய்னா

Updated On: 

13 Aug 2025 08:40 AM

ஆன்லைன் சூதாட்ட ஆப் தொடர்பாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை (Suresh Raina) இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 13ம் தேதி விசாரணைக்கு அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, சட்டவிரோத சூதாட்ட ஆப் (Betting App) தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்காக சுரேஷ் ரெய்னா அமலாக்கத்துறை முன் ஆஜராகலாம். அதனை தொடர்ந்து, மத்திய புலனாய்வு நிறுவனம் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து விசாரணையை தொடங்கும்.

ALSO READ: ஐபிஎல்லில் விளையாடுவேனா..? டிசம்பர் மாதத்திற்குள் முடிவு.. எம்.எஸ்.தோனி சொன்ன எதிர்கால திட்டம்!

என்ன நடந்தது..?

பந்தய செயலியான 1xBet கடந்த 2024ம் ஆண்டு டிசம்பரில் சுரேஷ் ரெய்னாவை அதன் கேமிங் தூதராக நியமித்தது. அப்போது பந்தய நிறுவனம், “சுரேஷ் ரெய்னாவுடனான எங்கள் கூட்டாண்மை விளையாட்டு பந்தய ரசிகர்களை பொறுப்புடன் பந்தயம் கட்ட ஊக்குவிக்கும். எனவே, அவரது பங்கு பொறுப்பான கேமிங் தூதர் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், அவர் எங்கள் பிராண்டின் முதல் தூதன் ஆவார்” என்று கூறியிருந்தது.

சிக்கலில் சிக்கிய சுரேஷ் ரெய்னா:


சமீப காலமாக சட்டவிரோத ஆன்லைன் பந்தய தளங்களுக்கு எதிரான விசாரணையை அமலாக்கத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், திரைப்பட பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் இத்தகைய பந்தய தளங்களில் விளம்பரங்களில் கவனம் செலுத்தி வருகிறது. தடை செய்யப்பட்ட பந்தய தளங்களான 1xBet, FairPlay, Parimatch மற்றும் Lotus 365 ஆகியவற்றின் விளம்பரம் தொடர்பான விசாரணையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் மற்றும் நடிகர்கள் சோனு சூட் மற்றும் ஊர்வசி ரவுடேலா ஆகியோரிடம் அமலாக்கத் துறை முன்பு விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ஆசிய கோப்பை இந்திய அணி.. ரிஷப் பண்ட் இடம் பெறமாட்டாரா?

அமலாக்கத்துறை விளக்கம்:

இதுகுறித்து அமலாக்கத்துறை அளித்த தகவலின்படி, “இந்த பந்தய தளங்கள் தங்கள் விளம்பரங்களில் 1xBat மற்றும் 1xBat ஸ்போர்டிங் லைன்ஸ் போன்ற புனைப்பெயர்களை பயன்படுத்துகின்றன. இந்த விளம்பரங்களில் பெரும்பாலும் பயனர்களை பந்தய தளங்களுக்கு திருப்பிவிடும் க்யூஆர் கோடுகள் உள்ளன. இது இந்திய சட்டத்தின் மீறலாகும். இதுபோன்ற பந்தய தளங்களுக்கு விளம்பரம் செய்யும் சில பிரலங்களுக்கு அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த தளங்கள் பெரும்பாலும் தங்களை திறன் சார்ந்த கேமிங் தளங்களாக விளம்பரப்படுத்துகின்றன. ஆனால், இவை போலி வழிமுறைகளை பயன்படுத்தி சட்டவிரோத பந்தயம் கட்டுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.