தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கையில் “ஓம் சரவண பவ” டாட்டூ…வைரலாகும் வீடியோ…பின்னணி என்ன!
South African cricketer Prenelan Subrayen : தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பிரெனலன் சுப்ராயன் கையில் "ஓம் சரவண பவ" என்ற முருகன் மந்திரம் பச்சை குத்தியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. அவர் குறித்த பின்னணியும் தெரியவந்துள்ளது .

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கையில் முருகன் டாட்டூ
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான பிரெனலன் சுப்ராயன் எஸ் ஏ 20 தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். எஸ் ஏ 20 தொடரில் சி எஸ் கே அணியின் தென்னாப்பிரிக்கா கிளையாக ஜே எஸ் கே அணி செயல்பட்டு வருகிறது. இந்த அணியில் பிரெனலன் சுப்ராயன் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த நிலையில், இந்த அணியானது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவின் தலைப்பில் “முத்து முருகன் துணை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த வீடியோவில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான பிரெனலன் சுப்ராயன் தனது வலது கையில் ஒரு டாட்டூ குத்தியுள்ளார். அந்த டாட்டூ குறித்து தான் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கையில் “ஓம் சரவண பவ” டாட்டூ
இதில், கிரிக்கெட் வீரர் பிரெனலன் சுப்ராயன் தனது கையில் “ஓம் சரவணபவ” என்ற முருகன் மந்திரத்தை பச்சையாக குத்தியுள்ளார். இவர் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதில், கிரிக்கெட் வீரர் பிரெனலன் சுப்ராயனின் குடும்பத்தினர் தமிழ் இனத்தை சேர்ந்தவராம். இவர்களது குடும்பம் தற்போது தென்னாப்பிரிக்காவில் வசித்து வருகிறது. ஜே. எஸ். கே. அணி வெளியிட்ட வீடியோவில் முருகன் பாடல் இசைக்கிறது.
மேலும் படிக்க: Shreyas Iyer: அதிவேகமாக எடை குறைந்த ஷ்ரேயாஸ் ஐயர்.. பிசிசிஐ சிறப்பு கவனம்.. இந்திய அணிக்காக விளையாடுவாரா?
உலக கோப்பை போட்டியில் ஆல் ரவுண்டர்
யு-19 உலக கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்காக சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் வீரர் பிரெனலன் சுப்ராயன் ஆல் ரவுண்டராக இருந்து வருகிறார். ஏற்கெனவே, தென்னாப்பிரிக்க அணியில் செனுரன் முத்துசாமி, கேசவ் மகாராஜ் ஆகியோர் தமிழினத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தமிழகம் மற்றும் மலேசியாவில் தமிழ் கடவுள் முருகருக்கு என்று தனி பக்தர்கள் கூட்டம் உள்ளது.
முருகன் டாட்டூ குறித்த வைரல் வீடியோ
முருகன் சார்ந்த விழாக்களில்…
தைப்பூசம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட முருகன் சார்ந்த விழாக்களில் அதிகளவு முருகன் பக்தர்கள் பங்கேற்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருவார்கள். இந்த பக்தர்கள் தங்களது கை உள்ளிட்ட பகுதிகளில் முருகன் படம், முருகன் பெயர் உள்ளிட்டவற்றை பச்சையாக குத்தி இருப்பார்கள். இது பரவலாக காணப்படுவதாகும்.
தமிழினம் மற்றும் தமிழ் கடவுகளை மறக்காமல்
ஆனால், தமிழினத்தை சேர்ந்த தென்னாப்பிரிக்காவில் வசித்து வரும் கிரிக்கெட் வீரர் தனது இனம் சார்ந்த கடவுளை மறக்காமல் தனது கையில் “ஓம் சரவண பவ” என்ற மந்திரத்தை பச்சையாக குத்தியிருப்பது தமிழர்கள் மட்டும் இன்றி அனைத்து நாட்டு மக்களிடமும் பேசும் பொருளாகி உள்ளது.
மேலும் படிக்க: T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள்.. இதுவரை அணிகளை அறிவித்த 5 நாடுகள்..!