Sourav Ganguly: இனிமேதான் ஆட்டம் ஆரம்பம்.. சுப்மன் கில்லுக்கு வார்னிங் கொடுத்த சவுரவ் கங்குலி!

Shubman Gill Captaincy: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. கேப்டன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, மீதமுள்ள டெஸ்ட்களில் அழுத்தத்தை கில் சமாளிக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.

Sourav Ganguly: இனிமேதான் ஆட்டம் ஆரம்பம்.. சுப்மன் கில்லுக்கு வார்னிங் கொடுத்த சவுரவ் கங்குலி!

கில் மற்றும் பண்ட் - சவுரவ் கங்குலி

Updated On: 

10 Jul 2025 13:42 PM

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3வது டெஸ்ட் போட்டி நடைபெறும் லார்ட்ஸ் டெஸ்டுக்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி (Sourav Ganguly), இந்திய கேப்டன் சுப்மன் கில்லை எச்சரித்துள்ளார். கங்குலியின் கூற்றுப்படி, மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் கில் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதன்பிறகு, இரு அணிகளும் முன்னிலை பெற கடுமையாக போராடும் என்று தெரிவித்தார்.

சவுரவ் கங்குலி கூறியது என்ன?

நேற்று அதாவது 2025 ஜூலை 8ம் தேதி சவுரவ் கங்குலி தனது 53வது பிறந்தநாளை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் கொண்டாடினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “இதுவரை நான் பார்த்ததிலேயே கில் பேட்டிங்கில் இதுதான் சிறந்தது. கில் இந்திய அணியில் இப்போதுதான் கேப்டனாகியுள்ளார். இது அவருக்கு ஹனிமூன் காலம். ஆனால் காலப்போக்கில் அவர் மீதான அழுத்தம் அதிகரிக்கும். அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்த அழுத்தம் மேலும் அதிகரிக்கும்.

கங்குலி புகழாரம்:


இந்திய கிரிக்கெட்டில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு தலைமுறையிலும் நீங்கள் சிறந்த வீரர்களைக் காண்பீர்கள். ஜாம்பவான் கவாஸ்கருக்குப் பிறகு கபில் தேவ், டெண்டுல்கர், டிராவிட், கும்ப்ளே, பின்னர் கோஹ்லி, இப்போது கில், ஜெய்ஸ்வால், ஆகாஷ்தீப், முகேஷ், சிராஜ் என நிறைய திறமையாளர்கள் அடுத்தடுத்து வந்தனர். ஒவ்வொரு தலைமுறையிலும், ஒரு இடைவெளி ஏற்படும் போதெல்லாம், புதிய வீரர்கள் வந்து அதை நிரப்புகிறார்கள். நான் எப்போதும் இதைச் சொல்லி வருகிறேன்.” என்றார்.

கேப்டனாக தனது முதல் தொடரில், சுப்மன் கில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 146.25 சராசரியுடன் 585 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று சதங்கள் அடங்கும், அவற்றில் ஒன்று இரட்டை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

3வது டெஸ்டில் இந்திய அணி எப்படி..?

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ராவுக்கு 2வது டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால், பும்ரா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.