Smriti – Muchhal: முச்சல் மீது அடுக்கடுக்கான புகார்.. ஸ்மிருதி நண்பருக்கு எதிராக அவதூறு வழக்கு!

Smriti Mandhana Childhood Friend: ஸ்மிருதி மந்தனாவும் பலாஷ் முச்சல் வருகின்ற 2025 நவம்பர் 23ம் தேதி திருமணம் செய்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தனர். ஆனால், திருமண நாளில் ஏற்பட்ட மருத்துவ அவசரநிலை காரணமாக, திருமணம் ஆரம்பத்தில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் திருமணம் ரத்து செய்யப்பட்டது.

Smriti – Muchhal: முச்சல் மீது அடுக்கடுக்கான புகார்.. ஸ்மிருதி நண்பருக்கு எதிராக அவதூறு வழக்கு!

ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சல்

Published: 

25 Jan 2026 11:17 AM

 IST

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுடனான (Smriti Mandhana) திருமண முறிவுக்குப் பிறகு பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பாடகர் பலாஷ் முச்சல் (Palaash Muchhal), தனது திருமண விழாவின் போது வேறொரு பெண்ணுடன் படுக்கையில் கையும் களவுமாக பிடிபட்டதாகவும், அப்போது இந்திய வீராங்கனைகள் முச்சலை தாக்கியதாகவும் சாங்லியைச் சேர்ந்த தயாரிப்பாளரும், ஸ்மிருதி மந்தனாவின் பால்ய நண்பருமான வித்நயன் மானே குற்றம் சாட்டினார். இந்தநிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பலாஷ் மானே மீது அவதூறு வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார்.

ALSO READ: விரைவில் இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடரா? ராஜீவ் சுக்லா பதில்!

என்ன நடந்தது..?

ஸ்மிருதி மந்தனாவும் பலாஷ் முச்சல் வருகின்ற 2025 நவம்பர் 23ம் தேதி திருமணம் செய்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தனர். ஆனால், திருமண நாளில் ஏற்பட்ட மருத்துவ அவசரநிலை காரணமாக, திருமணம் ஆரம்பத்தில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் திருமணம் ரத்து செய்யப்பட்டது. திருமண நாளில் பலாஷ் முச்சல் ஒரு பெண்ணுடன் படுக்கையில் சிக்கி பெண் கிரிக்கெட் வீராங்கனையால் தாக்கப்பட்டதாக மானே குற்றம் சாட்டியிருந்தார். இது மட்டுமின்றி, பலாஷ் முச்சல் தனக்கு ரூ. 4 கோடி மோசடி செய்ததாகவும் மானே குற்றம் சாட்டினார்.

பலாஷ் இன்ஸ்டாகிராமில் தகவல்:

இதுதொடர்பாக பலாஷ் முச்சல் ஆரம்பத்தில், மானேவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க தனது வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிப்பதாகவும் கூறினார். பலாஷ் இப்போது மற்றொரு பதிவில் மானேவுக்கு ரூ. 10 கோடி அவதூறுக்காக சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்பியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ”எனது வழக்கறிஞர் ஷ்ரேயான்ஷ் மிதரே, சாங்லியைச் சேர்ந்த வித்நயன் மானே கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை, மேலும் எனது நற்பெயரையும், குணத்தையும் கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே கூறப்பட்டவை என்பதால், அவருக்கு ரூ.10 கோடி அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு, பலாஷ் தன்னை ரூ. 40 லட்சம் மோசடி செய்ததாக மகாராஷ்டிரா சாங்லி மாவட்டத்தில் உள்ள காவல்துறையிடம் மானே புகார் அளித்ததாக செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் எந்த எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை.

ALSO READ: மந்தனா- முச்சல் திருமணம் ஏன் முறிந்தது? வெளியான அதிர்ச்சி தகவல்!

ரத்து செய்யப்பட்ட பலாஷ் மற்றும் மந்தனாவின் திருமணம்:

பலாஷ் முச்சல் – ஸ்மிருதி மந்தனாவும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்தனர். கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி இந்திய அணி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. இதன் தொடர்ச்சியாக மந்தனா மற்றும் பலாஷின் திருமணம் மறுநாள் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஹால்டி மற்றும் மெஹந்தி உட்பட பல திருமண சடங்குகள் நடைபெற்ற நிலையில், திருமணமான அன்று காலையில், திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக செய்தி வெளியானது. ஆரம்பத்தில், மந்தனாவின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், திருமணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர், தம்பதியினர் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் திருமணத்தை ரத்து செய்ததாக அறிவித்தனர்.

இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
சட்டப்படி வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
விருது விழாவில் கவனம் ஈர்த்த ஷாருக்கானின் ரூ.13 கோடி ரோலெக்ஸ் வாட்ச் - அப்படி என்ன ஸ்பெஷல்?